திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலும் முழு ஊரடங்கு! – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

 

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலும் முழு ஊரடங்கு! – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி பகுதியில் வருகிற 20ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் வேலுமணி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனாத் தொற்று வேகமாக பரவி வருகிறது. எனவே, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு வருமா என்று பலரும் பயந்துபோய் உள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பே இல்லை என்று முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேறு அறிவித்திருந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலும் முழு ஊரடங்கு! – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்புஎனவே, நகராட்சி, பேரூராட்சி அளவில் தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம், போடி பகுதிக்கு என தனித்தனியாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தற்போது அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சிக்கு மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியிலும் முழு ஊரடங்கு! – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்புஇது தொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஜூலை 11 முதல் 20 வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

http://

பால் & மருந்தகங்கள் வழக்கம் போல் செயல்படும். இதற்கு அனைத்து வியாபாரிகளும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.