விருதுநகரில் 57 பகுதிகளில் முழு ஊரடங்கு! – கலெக்டர் அறிவிப்பு

 

விருதுநகரில் 57 பகுதிகளில் முழு ஊரடங்கு! – கலெக்டர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உள்ள 57 பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கொண்டுவருவது பற்றி திட்டமிடப்பட்டது. முழு ஊரடங்கு கொண்டுவர வேண்டாம் என்ற அறிவுறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.

விருதுநகரில் 57 பகுதிகளில் முழு ஊரடங்கு! – கலெக்டர் அறிவிப்புஇந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உள்ள 57 கட்டுப்பாடு பகுதிகளில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரையில் இந்த ஊரடங்கு தொடரும். மக்கள் நடமாட, வணிக நிறுவனங்கள் செயல்பட முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது என்று அவர் அறிவித்துள்ளார்.

விருதுநகரில் 57 பகுதிகளில் முழு ஊரடங்கு! – கலெக்டர் அறிவிப்புநேற்று விருதுநகர் மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் உயிரிழந்தார். கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. குறிப்பிட்ட பகுதிக்கு மட்டும் ஊரடங்கு என்று அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை மேலும் ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.