அடுத்த வருஷம் முழுக்க கிரிக்கெட் போட்டிகள்! – ரசிகர்களுக்கு ஜாலி – வீரர்களுக்கு?

அடுத்த வருஷம் முழுக்க கிரிக்கெட் போட்டிகள்! – ரசிகர்களுக்கு ஜாலி – வீரர்களுக்கு?

ஐபிஎல் திருவிழா கோலாகலமாக முடிந்துவிட்டது. பலரும் கணித்ததைப் போலவே மும்பை ஐந்தாம் முறை கோப்பையை வென்றிருக்கிறது. அதன் சூடு குறைவதற்கு முன்பே, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேயாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா கிடிக்கெட் அணிகளுக்கு இடையே நவம்பர் 27 – லிருந்து டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை போட்டிகளிலும் மோத இருக்கின்றன. இந்தப் போட்டி ஜனவரி 19-ம் தேதி தான் முடிவடையும்.

அடுத்த வருஷம் முழுக்க கிரிக்கெட் போட்டிகள்! – ரசிகர்களுக்கு ஜாலி – வீரர்களுக்கு?

ஜனவரி மாதமே இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 5 டெஸ்ட் போட்டிகள் இரு நாட்டு அணிகளுக்கும் இடையே நடக்க இருக்கின்றன. போட்டி நடைபெறும் நாட்களே 25.

மார்ச் மாததில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வருகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் இரு அணிகளும் இடையே நடக்கின்றன.

அடுத்த வருஷம் முழுக்க கிரிக்கெட் போட்டிகள்! – ரசிகர்களுக்கு ஜாலி – வீரர்களுக்கு?

ஏப்ரல் – மே மாதங்களில் ஐபிஎல் 2021 தொடங்கி விடும். தொடர்ச்சியாக 60 போட்டிகள். அடுத்த ஆண்டு 1 அல்லது 2 புதிய டீம்கள் அதிகப்படுத்தலாம் என்ற பேச்சு இருக்கிறது. எனவே, 60 போட்டிகள் என்பது இன்னும் அதிகரிக்கலாம்.

ஜூலை மாதத்தில் இலங்கை நாட்டுக்கு இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள விருக்கிறது. அங்கு 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றன இரு அணிகளும். அதே மாதத்தில் இங்கிலாந்து செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி. அங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. அது செப்டம்பரில் முடிகிறது.

அடுத்த வருஷம் முழுக்க கிரிக்கெட் போட்டிகள்! – ரசிகர்களுக்கு ஜாலி – வீரர்களுக்கு?

செப்டம்பர் மாதம் சவுத் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வருகிறது. ஒருநாள், டி20 என தலா மூன்று போட்டிகளில் ஆடுகிறது.

அக்டோபர் – நவம்பரில் டி20 உலககோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது. அதிலும் இந்திய அணி விளையாடுகிறது.

நவம்பர் மாதம் நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது. இங்கு, இரு அணிகளுக்கும் இடையே 2 டெஸ்ட், டி20 போட்டிகள் 3 ஆகியவை நடக்கவிருக்கின்றன.

அடுத்த வருஷம் முழுக்க கிரிக்கெட் போட்டிகள்! – ரசிகர்களுக்கு ஜாலி – வீரர்களுக்கு?

அது முடிந்தவுடனே டிசம்பரில் சவுத் ஆப்பிரிக்காவுக்கு இந்திய கிரிக்கெட் அணி சென்று, அங்கு 3 டெஸ்ட், 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. அதற்கடுத்து 2022 ஆண்டுக்கான ஷெட்யூல் தொடங்கி விடுகிறது.

அடுத்த ஆண்டில் ஒரு மாதம்கூட பிரேக் இல்லாமல் தொடர்ச்சியாக நிறைய போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி ஆடுகிறது. ரசிகர்கள் ஜாலியாகப் பார்க்கத் தயாராகி விட்டார்கள். ஆனால், இடைவெளி இல்லாமல் இத்தனை போட்டிகள் ஆடுவது வீரர்களின் உடல்திறனை பாதிக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இடையறதா பயணமும், பயிற்சியும் போட்டியும் அவர்களின் ஆட்டத்திறனை மாற்றிவிடக்கூடும் என்று கூறுகிறார்கள்.

அடுத்த வருஷம் முழுக்க கிரிக்கெட் போட்டிகள்! – ரசிகர்களுக்கு ஜாலி – வீரர்களுக்கு?

ஆயினும் இன்னொரு தரப்பினர், இந்திய கிரிக்கெட்டில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குச் சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கும் சூழல் இது. அதனால், நிச்சயம் புதிய வீரர்கள் கிடைப்பார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.