அடம்பிடிக்கும் ஒபெக் நாடுகள்… கறாராக இருக்கும் மத்திய அரசு – பெட்ரோல் 100 ரூபாயை தாண்டும் அபாயம்!

 

அடம்பிடிக்கும் ஒபெக் நாடுகள்… கறாராக இருக்கும் மத்திய அரசு – பெட்ரோல் 100 ரூபாயை தாண்டும் அபாயம்!

இந்தியாவின் தலையாயப் பிரச்சினையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு இருக்கிறது. இதனால் சரக்குப் போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என சொல்லிமுடிப்பதற்குள் இரவோடு இரவாக சரக்கு லாரி கட்டணங்களை 30% அளவுக்கு உயர்த்தின. இதனால் மிகக் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்களின் விலை கூட விண்ணை முட்டும் என்ற அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் செய்வதறியாது திகைத்து போய் இருக்கின்றனர்.

அடம்பிடிக்கும் ஒபெக் நாடுகள்… கறாராக இருக்கும் மத்திய அரசு – பெட்ரோல் 100 ரூபாயை தாண்டும் அபாயம்!

இவ்விவகாரத்தை மத்திய அமைச்சர்களிடம் முறையிட்டால் அவர்களோ பொறுப்பற்ற பதிலை அளிக்கிறார்கள். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசின் மீது பழிபோட்டுக் கொள்ளுங்கள் எனக்கென்ன என்பது போல் ஒரு கருத்தை உதிர்த்தார். சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, மாற்று எரிபொருள் சக்திக்கு மாறுங்கள் என அசால்டாக சொல்லிவிட்டார். சமையல் கேஸ் சிலிண்டருக்கு என்ன மாற்று என அவர் தெரிவிக்கவில்லை. பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மட்டும் வேறு வழியில்லாமல் முறையாகப் பதில் கூறிக் கொண்டிருக்கிறார்.

அடம்பிடிக்கும் ஒபெக் நாடுகள்… கறாராக இருக்கும் மத்திய அரசு – பெட்ரோல் 100 ரூபாயை தாண்டும் அபாயம்!

சமீபத்தில் பேட்டியளித்த அவர் இரு காரணங்களைக் கூறினார். ஒபெக் நாடுகள் அதாவது கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் லாபத்திற்காக உற்பத்தியை அதிகரிக்காமல் விலையை ஏற்றிவிடுவதாகத் தெரிவித்தார். அதேபோல கொரோனா நடவடிக்கைகளுக்கான செலவைச் சரிக்கட்ட அரசுகள் பெட்ரோல் வரியைப் பயன்படுத்துவதாகவும் கூறினார். ஏப்ரல் மாத இறுதியில் விலை கட்டுக்குள் இருக்கும் என்றும் உறுதியளித்தார். தற்போது இந்த உத்தரவாதத்துக்கும் வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

Dharmendra Pradhan - Wikipedia

நேற்று சவூதி அரேபியா தலைமையிலான ஒபெக் பிளஸ் நாடுகளின் இணையவழி கூட்டம் நடைபெற்றது. திரிபுவகை கொரோனா பரவல், உலக பொருளாதார மந்தம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க திட்டமில்லை என்று கூட்டத்தில் பேசியிருக்கின்றனர். இதனை அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. லாக்டவுனுக்கு பிறகு கச்சா எண்ணெயின் தேவை உலகளவில் அதிகரித்திருக்கும் போதிலும், உற்பத்தியை அதிகரிக்காமல் ஒபெக் நாடுகள் அடம்பிடிக்கின்றன.

அடம்பிடிக்கும் ஒபெக் நாடுகள்… கறாராக இருக்கும் மத்திய அரசு – பெட்ரோல் 100 ரூபாயை தாண்டும் அபாயம்!

இதனால் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் என்பதால் இந்தியா முழுமைக்குமே பெட்ரோல், டீசல் விலை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநிலங்களிலேயே பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டி விற்கப்படுகிறது. தொடர்ந்து உயரும் பட்சத்தில் மற்ற மாநிலங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டும் என அவதானிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் வரியைக் குறைத்தால் மட்டுமே ஓரளவாவது விலை கட்டுக்குள் இருக்கும். ஆனால் அது நடக்காத காரியம் என்றே தோன்றுகிறது. அப்படி நினைத்திருந்தால் கடந்த பட்ஜெட்டிலேயே பெட்ரோல், டீசல் மீதான் உள்கட்டமைப்பு செஸ் வரியை உயர்த்தியிருக்க மாட்டார்கள்.