முதலில் மனைவி -அடுத்து மகன் -கடைசியில் கணவன் -கொரானா ஊரடங்கால் உருக்குலைந்த குடும்பம்

முதலில் மனைவி -அடுத்து மகன் -கடைசியில் கணவன் -கொரானா ஊரடங்கால் உருக்குலைந்த குடும்பம்

ஊரடங்கால் வேலை இழந்த ஒருவர் தன்னுடைய குடும்பத்தையே கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்

முதலில் மனைவி -அடுத்து மகன் -கடைசியில் கணவன் -கொரானா ஊரடங்கால் உருக்குலைந்த குடும்பம்

மகாராஷ்டிராவின் புனே மாவட்டம் அருகே கதம் வஸ்தி பகுதியில் 38 வயதான ஹனுமந்த் ஷிண்டே, அவரது மனைவி பிரத்னியா மற்றும் அவரது மகன் சிவ்தேஜ் ஆகியோர் வசித்து வந்தனர் .அந்தக் கணவன் ஹனுமந்த் அந்த புனேவில் ஒரு டெம்போ டிரைவராக பணிபுரிகிறார் .சந்தோஷமாக அவரின் வருமானத்தில் வாழ்ந்த அந்த குடும்பத்த்தில் இந்த ஊரடங்கால் வருமானம் போனது .அதனால் நிம்மதி போனது .
பின்னர் டெம்போக்கள் ஓடாததால் குடும்பம் நடத்த வருமானமில்லாததால் தினமும் குடும்பத்தில் சண்டை வந்தது .அதன் பிறகு அந்த கணவன் ஒரு முடிவெடுத்தார் .அதன் படி அவர் முதலில் அவரின் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றார் .இரண்டாவதாக அவரின் மகனை கழுத்தை நெரித்து கொன்றார்.கடைசியில் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் .வெளியே போய் விட்டு வந்த அவரின் தந்தை ,அவரின் வீட்டில் மூவரும் இறந்து கிடப்பதை பார்த்து போலீசுக்கு தகவல் சொன்னார் .பிறகு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .
இந்த கொரானாவால் ஏற்பட்ட ஊரடங்கு ஒரு குடும்பத்தையே உருக்குலைய வைத்துள்ளது .இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை உண்டாகியுள்ளது .ஒரு புறம் கொரானா மக்களை கொல்கிறது ,மறுபுறம் இந்த ஊரடங்கு மக்களை கொல்கிறது .

முதலில் மனைவி -அடுத்து மகன் -கடைசியில் கணவன் -கொரானா ஊரடங்கால் உருக்குலைந்த குடும்பம்