கொரானா வந்த தந்தை -கோபமான மகன் -அடுத்து டாக்டருக்கு நேர்ந்த கதி

 

கொரானா வந்த தந்தை -கோபமான மகன் -அடுத்து டாக்டருக்கு நேர்ந்த கதி

தந்தைக்கு சரியான முறையில் சிகிசிச்சையளிக்கவில்லை என்று கூறி , ஒரு டாக்டரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்

கொரானா வந்த தந்தை -கோபமான மகன் -அடுத்து டாக்டருக்கு நேர்ந்த கதி

பெங்களூரு பன்னேர்கட்டா சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குமார் என்பவரின் தந்தை கொரானா வைரஸ் பாதிக்கப்பட்டு கடந்த  வாரம் அனுமதிக்கப்பட்டார் .இந்நிலையில் அவருக்கு நடந்த சிகிச்சையில் அவருக்கு கொரானா  குணமானது .ஆனால் அவரின் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருந்ததால் அவர் உடல் நிலை மோசமான  நிலையில் இருந்தது .பின்னர் அவர் சாதரண வார்டுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை நடந்து வந்தது .

கடந்த வாரம் குமார்  தன்னுடைய தந்தையின் உடல்நிலை குறித்து அங்கிருந்த ஒரு மருத்துவரிடம் விசாரித்துக்கொண்டிருந்தார் .அப்போது அந்த டாக்டரும் ஒரு நர்ஸும் அவரின் மோசமான உடல்நிலை குறித்து கூறினர். அதை கேட்டு ஆவேசமடைந்த குமார் அந்த டாக்டரை தன்னுடைய செல்போனால் தாக்கினார் .பின்னர் அதை அந்த  டாக்ட்டரை நோக்கி தூக்கி வீசினார் .அப்போது  டாக்டர் நகர்ந்து கொண்டதால் காயமேற்படவில்லை

பின்னர் அந்த அந்த டாக்டரும்  நர்ஸும் இந்த தாக்குதல்  குறித்து அங்கிருந்து காவல் நிலையத்தில் புகார் கூரினார்கள் .பின்னர் குமார் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது .பின்னர் குமார் ஜாமீனில் வெளிய வந்தார் .இதேபோல அடிக்கடி டாக்டராகல் மீது தாக்குதல் நடப்பதற்கு டாக்டர்கள்  சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது .