ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு – நாட்டு மருந்து, பழக்கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

 

ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பு – நாட்டு மருந்து, பழக்கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி!

தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் காய்கறி மற்றும் மளிகை கடைகள் திறக்கவும், அத்தியாவசிய பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியேறவும் தமிழக அரசு அனுமதி அளித்தது.

Image

இந்நிலையில் தற்போது கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, “காய்கறி, மளிகை கடைகளை போன்று பழ கடைகளும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி.

அனைத்து தொழில் நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பிற பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒருநாள் மட்டும் அனுமதி

ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.

ஆங்கில மருந்து கடைகளை போல நாட்டு மருந்து கடைகளும் செயல்பட அனுமதி ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.