“தேர்தல் களத்தில் இறங்கியது அதிமுக” பிப் 24 முதல் விருப்ப மனு விநியோகம்!

 

“தேர்தல் களத்தில்  இறங்கியது அதிமுக” பிப் 24 முதல் விருப்ப மனு விநியோகம்!

சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட பிப்.24ம் தேதி முதல் மார்ச்-5ம் தேதி வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளார்.

“தேர்தல் களத்தில்  இறங்கியது அதிமுக” பிப் 24 முதல் விருப்ப மனு விநியோகம்!

சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது. அதேபோல் தமிழக அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. திமுக – அதிமுக என இரு பிரதான கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.இருப்பினும் கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இன்னும் இருகட்சிகளும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவிக்கவில்லை.

“தேர்தல் களத்தில்  இறங்கியது அதிமுக” பிப் 24 முதல் விருப்ப மனு விநியோகம்!

இந்நிலையில் அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல் புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளன. இதை முன்னிட்டு அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கழக உறுப்பினர்கள் ,தலைமை கழகத்தில் வருகின்ற 24-ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப கட்டணம் தொகையை செலுத்தி விருப்பமனு விண்ணப்ப படிவங்களை பெற்று கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் விருப்பமான பெறுவதற்கான விண்ணப்ப தொகையாக தமிழ்நாடு மாநிலத்தில் 15 ஆயிரம் ரூபாயும், புதுச்சேரி மாநிலத்திற்கு ஐந்தாயிரம் ரூபாயும்,கேரள மாநிலத்திற்கு 2000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.