நண்பனை நிர்வாணமாக்கி பிறந்த நாள் கொண்டாட்டம்… போதை இளைஞர்களால் தஞ்சையில் பரபரப்பு!

 

நண்பனை நிர்வாணமாக்கி பிறந்த நாள் கொண்டாட்டம்… போதை இளைஞர்களால் தஞ்சையில் பரபரப்பு!

தஞ்சாவூர்

தஞ்சையில் மதுபோதையில் இளைஞரை நிர்வாணமாக்கி பிறந்த நாள் கொண்டாடிய நண்பர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்கி உள்ள கல்லூரி மாணவர் ஒருவரின் பிறந்த நாளையொட்டி, அவரது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோர் கடந்த 2ஆம் தேதி நள்ளிரவு சாலையின் நடுவே, பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போதை தலைகேறிய அந்த இளைஞர்கள் பிறந்தநாள் கொண்டாடிய மாணவரின் ஆடைகளை வலுக்கட்டாயமாக கழற்றி நிர்வாணமாக்கி, கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடி உள்ளனர்.

நண்பனை நிர்வாணமாக்கி பிறந்த நாள் கொண்டாட்டம்… போதை இளைஞர்களால் தஞ்சையில் பரபரப்பு!

மேலும், அந்த பகுதி மக்களையும், சாலைகளில் செல்பவர்களையும் அச்சுறுத்தும் விதமாக அவர்கள் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இளைஞர் நிர்வாணமாக பிறந்த நாள் கொண்டாடியபோது, அந்த பகுதியை சேர்ந்தவர் சிலர் செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

தற்போது அந்த வீடியோ வேகமாக பரவி வருவதால் தஞ்சையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.