ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு சென்னையில் தடையில்லை! – கமிஷனர் அறிவிப்பு

சென்னையில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடையில்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசை சார்ந்தவர்களுக்கும் தொடர்பு உள்ளது என்று குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீசை காவல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று பல்வேறு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை அண்ணாநகர் ஆர்ச் பகுதியில் வாகனத் தணிக்கையை ஆய்வு செய்த பிறகு நிருபர்களுக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பேட்டி அளித்தார். அப்போது, “பொது மக்கள் மற்றும் காவலர்களுக்கு இடையே இணைந்து காவலர்களுக்கு உதவியாக இருக்கத்தான் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவர்களைக் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபடுத்துவது இல்லை.

சட்டத்தை மீறி ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவலர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. எனவே, சென்னை பெருநகரத்தில் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்குத் தடை இல்லை. சர்வதேச அளவில் ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வில்லாத ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்” என்றார்.

Most Popular

விருதுநகர் பட்டாசு ஆலையில் 25க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்பு!

விருதுநகரில் தியாகராஜபுரம் அருகில் ராஜகண்ணு பட்டாசு தொழிற்சாலையில் 25க்கும் மேற்பட்ட பெண் குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டுள்ளனர். கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் மட்டும் இரண்டு லட்சம் குழந்தைகள் காணாமல் போயிருக்கின்றன. குழந்தை தொழிலாளர்களாகவும், கூலிக்கு அடிமைகளாகவும்...

வாடகை போலீஸ் ட்ரஸ்ஸை மாட்டினார் – லஞ்சம் வாங்கும்போது ஒரிஜினல் போலீசிடம் மாட்டினார்- போலீஸ் அதிகாரியாக நடித்து மாமூல் வாங்கிய பெண்.

டெல்லியில் ஒரு பெண், தான் டெல்லியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் பணி புரியும் சப் இன்ஸ்பெக்டர் என்று கூறி பலரிடம் போலியான சலான்களை கொடுத்து பணம் வசூல் செய்துள்ளார் . டெல்லியில் இரண்டு...

கொரோனா தொற்று உறுதியானதால் ஞானவேல்ராஜா இன்று விசாரணைக்கு ஆஜராகவில்லை!

பண மோசடி வழக்கில், சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை ஆகஸ்ட் 27வரை நீட்டித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 8 ஆம் தேதிக்குப் பின்னர் ஞானவேல்ராஜாவுக்கு கொரோனா...

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை முழுமையாக அகற்ற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!