தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: தூத்துக்குடியில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்குத் தடை!

 

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: தூத்துக்குடியில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்குத் தடை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் சாத்தான்குளம் என்னும் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ், ஊரடங்கு நேரத்தில் கடையைத் திறந்து வைத்ததால் கைது செய்யப்பட்டு சிறையிலேயே காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறும் வழக்கை சிபிசிஐடி போலீசார் உடனடியாக கையிலெடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்: தூத்துக்குடியில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்குத் தடை!

அதன் படி, விசாரணையில் கிடைத்த சாட்சியங்களின் அடிப்படையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில், அவர்கள் மதுரை சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருக்கும் தொடர்பு இருக்கும் எனப் புகார் எழுந்திருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடியில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விழுப்புரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குழுவினருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.