“லவ் பண்ணு ,இல்லேன்னா இதையாவது பண்ணு..” -ஒரு பாரில் பெண்ணுக்கு நேர்ந்த நிலை

 

“லவ் பண்ணு ,இல்லேன்னா இதையாவது பண்ணு..” -ஒரு பாரில் பெண்ணுக்கு நேர்ந்த நிலை

ஒரு பப்பில் பார்ட்டிக்கு சென்ற பெண்ணிடம் ,அவரின் நண்பர் ஒருவர் தன்னை காதலிக்குமாறும் ,கல்யாணம் செய்து கொள்ளுமாறும் வற்புறுத்தி, அவரிடமிருந்த பணம் செல்போனை பறித்து சென்றதால் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

“லவ் பண்ணு ,இல்லேன்னா இதையாவது பண்ணு..” -ஒரு பாரில் பெண்ணுக்கு நேர்ந்த நிலை

கர்நாடகாவின் பெங்களூருவில் தனிசந்திராவில் வசிக்கும் ஜெனிபரை அவரது நண்பர் எரிக் சார்லஸ் சனிக்கிழமை ரெசிடென்சி சாலையில் உள்ள ஒரு பப்பிற்கு அழைத்தார் .அவரின் அழைப்பின் பேரில் அந்த பெண் அந்த பப்பில் உள்ள பாருக்கு சென்றார் .அப்போது சார்லஸ் அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறும் ,தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறும் டார்ச்சர் செய்துள்ளார்
அதை கேட்ட அந்த பெண் தனக்கு யோசிக்க நேரம் வேண்டுமென்றும் ,இது விஷயமாக தன்னுடைய பெற்றோரை கலந்தாலோசிக்க வேண்டுமென்றும் கூறினார் .அதை கேட்ட அந்த சார்லஸ் அந்த பெண் மீது கடும் கோபமுற்றார் .உடனே அவர் அந்த பெண்ணிடம் கொஞ்சம் பணம் கேட்டார் .அதற்கு அந்த பெண் தர மறுத்துள்ளார் .உடனே அவர் அந்த ஜெனீபரை தாக்கிவிட்டு அந்த பெண்ணிடமிருந்து 45000 ரூபாய் பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை பறித்து கொண்டு ஓடி விட்டார் .
அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சார்லஸ் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினார் .பொலிஸார் வழக்கு பதிவு அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து, அவரிடமிருந்த பணத்தை பறித்துச்சென்ற சார்லசை தேடி வருகின்றனர்.

“லவ் பண்ணு ,இல்லேன்னா இதையாவது பண்ணு..” -ஒரு பாரில் பெண்ணுக்கு நேர்ந்த நிலை