Home தொழில்நுட்பம் ''அடிக்கடி கை கழுவ நினைவுப்படுத்தும் பிட்னஸ் டிராக்கர்'' - சாம்சங் அறிமுகம் !

”அடிக்கடி கை கழுவ நினைவுப்படுத்தும் பிட்னஸ் டிராக்கர்” – சாம்சங் அறிமுகம் !

அடிக்கடி கைகளை கழுவ நினைவுப்படுத்தும் வாட்டர் புரூப் பிட்னஸ் பேண்ட் ஒன்றை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி பிட் 2 என்ற பெயரில் அறிமுகமாகி உள்ள இந்த பிட்னஸ் டிராக்கர் ஏராளமான சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது. 1.1 இன்ச் அமோலெட் திரை 15 நாட்கள் தாக்கு பிடிக்கும் பேட்டரி திறன், வாட்டர் புரூப், முன்புற தொடுதிரை பட்டன், மிக சிறப்பான பிரைட்நஸ் மற்றும் சுலபமாக பயன்படுத்தும் வகையில் நேவிகேஷன் பட்டன் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

இதில் மேலும் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இதை அணிபவர் சரியான அளவுக்கு தினமும் தூங்குகிறாரா என்பதை கண்காணித்து, நான்கு விதங்களில் தங்களின் தூக்க குறைபாட்டை தங்களுக்கு தெரியப்படுத்துமாம். அதேப்போல தங்களின் மன அழுத்தம் எந்தளவு உள்ளது என்பதையும் கண்டறிந்து அதிக மன அழுத்தம் உள்ளபோது, அதை குறைக்க, சுவாச பயிற்சி மேற்கொள்ளவும் அறிவுறுத்துமாம்.

இதேப்போல இதில் மற்றொரு முக்கியமான சிறப்பம்சம் உள்ளது. அது தான் ஹேண்ட் வாஷ் ஃபீச்சர் ஆகும். அதன்படி இந்த பிட்னஸ் பேண்டை அணிபவரின் கைகளை கழுவ அடிக்கடி நினைவுப்படுத்துமாம். தற்போதையை தொற்று பரவல் காலக்கட்டத்தில் இந்த வசதி மிக முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. இரண்டு விதமான வண்ணங்களில் கிடைக்கும் இந்த பிட்னஸ் டிராக்கர், அமேசான், சாம்சங் ஆன்லைன் ஸ்டோர் உள்ளிட்ட தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் விலை 3,999 ரூபாய் ஆகும்.

  • எஸ். முத்துக்குமார்

மாவட்ட செய்திகள்

Most Popular

மிதக்கும் கடலூர்-நேரில் ஆய்வு செய்ய விரைகிறார் முதலமைச்சர் பழனிசாமி!

புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் கடலூருக்கு செல்ல உள்ளார்.

“பட்ட பகலில் வருவான் ,பலாத்காரம் செய்வான்” -எட்டாம் வகுப்பு மாணவியின் பரிதாப கதை

ஒரு எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவியை ஒரு 19 வயது வாலிபர் மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது...

ஜெயிச்சு தோற்ற ரம்யா… நீள வசனம் ஆரி… விட்டுக்கொடுத்த கேபி! – பிக்பாஸ் 52-ம் நாள்

எப்பாவாச்சும் நல்ல கண்டண்ட் கிடைக்கும் ஒரு டாஸ்க்கைக் கொடுக்கிறார் பிக்பாஸ். அதுல இந்த கால் செண்டர் டாஸ்க்கும் ஒண்ணு. ஆனா, அதைப் பரபரன்னு கொடுக்கணும்னு நினைக்காம, சீரியல் கணக்கா இழுத்தடிக்க...

“உன்னை வச்சிக்கத்தான் முடியும், கட்டிக்க முடியாது” -கழட்டி விட்ட காதலனின் கல்யாணத்தை நிறுத்திய காதலி.

ஒரு பெண்ணை காதலித்து விட்டு அவரை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி, பலமுறை உறவு கொண்ட காதலனின் கல்யாணத்திற்கு முதல் நாள் அந்த காதலி...
Do NOT follow this link or you will be banned from the site!