Home உலகம் கைகுலுக்கிய பிரான்ஸ் அதிபரின் கன்னத்தில் பளார் விட்ட நபர் - அதிரவைக்கும் வீடியோ!

கைகுலுக்கிய பிரான்ஸ் அதிபரின் கன்னத்தில் பளார் விட்ட நபர் – அதிரவைக்கும் வீடியோ!

பொதுவெளியில் பிரான்ஸ் நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் கன்னத்தில் நபர் ஒருவர் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. A Bas La Macronie (மக்ரோனிசம் வீழும்) என்று கத்திக்கொண்டே அறைந்திருக்கிறார். உடனடியாக அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்நபரையும் அவருடன் வந்த இன்னொரு இளைஞரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். இன்னும் சில அதிகாரிகள் அதிபர் மக்ரோனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் அரசுக்கெதிரான Yellow vest போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது.

கைகுலுக்கிய பிரான்ஸ் அதிபரின் கன்னத்தில் பளார் விட்ட நபர் - அதிரவைக்கும் வீடியோ!
Watch: France President Emmanuel Macron Slapped In The Face - VINnews

அந்த இளைஞர்கள் அதிபரை அடிக்கும்போது, Montjoie Saint-Denis என்ற வாசகத்தையும் கத்தினர். 12ஆம் நூற்றாண்டில் பிரான்ஸில் மன்னராட்சி நடைபெற்றபோது இந்த வாசகம் மிகப் பிரபலம். அந்த வாசகம் தற்போது தீவிர வலதுசாரிகளின் குரலாக மாறியிருக்கிறது. மக்ரோன் இடதுசாரி கருத்தியல் கொண்ட அதிபர். நாட்டில் அவருக்கு எதிராக வலதுசாரிகள் போர்க்குரல் எழுப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத் தான் இந்தச் சம்பத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தத் தரங்கெட்ட செயலுக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அரசியல் ரீதியாக மக்ரோனை விமர்சித்து வரும் தீவிர வலதுசாரி தலைவரான மரைன் லு பென், “நாட்டில் மக்ரோனின் முதல் எதிரி நான் தான். இருப்பினும் அவர் பிரான்ஸின் அதிபர். அவரை நாம் அரசிய ரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவிர; இம்மாதிரியான வன்முறைச் செயல்களில் ஈடுபடக் கூடாது. அது எங்கள் ஆதரவாளர்களானாலும் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்று ஆவேசமாகப் பேசியுள்ளார். இச்சம்பவத்திற்குப் பின் பேசிய மக்ரோன், “எனது பாதுகாப்பிற்காக நான் அச்சப்படவில்லை. எனது மக்கள் பணியைத் தொடர்வதற்கு யாரும் என்னை தடுக்க முடியாது” என்றார்.

Emmanuel Macron | Biography & Facts | Britannica

பிரான்ஸில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. தற்போது பரவல் குறைந்து வருவதால் படிபடியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர். இதனிடையே அடுத்த வருடம் அதிபர் தேர்தல் வேறு வருகிறது. இதன் காரணமாக மக்களின் பல்ஸ் பார்க்க மக்ரோன் கடந்த இரண்டு நாட்களாக பிரான்ஸ் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு தெற்கு பிரான்ஸுக்கு அவர் சென்றபோது தான் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

கைகுலுக்கிய பிரான்ஸ் அதிபரின் கன்னத்தில் பளார் விட்ட நபர் - அதிரவைக்கும் வீடியோ!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை நீக்குங்க.. சுனில் ஜாகர்

பஞ்சாப் காங்கிரஸை வேறு யாராவது பலப்படுத்த முடியுமானால் என்னை தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று நான் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறேன் என சுனில் ஜாகர் தெரிவித்தார்.

பீகார் பா.ஜ.க. கூட்டணிக்குள் விரிசல்?.. ஜிதன் ராம் மாஞ்சியுடன் லாலு பிரசாத் மூத்த மகன் ரகசிய சந்திப்பு

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜிதன் ராம் மாஞ்சியை, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்...

கடவுளின் அவதாரம் அழைத்துக்கொள்ளும் சிவசங்கருக்கு மீண்டும் சம்மன்

கடவுளின் அவதாரம் என தன்னை அழைத்துக் கொள்ளும் சிவசங்கர் பாபா மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்காக அவருக்கு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.

காஷ்மீர் விவகாரம்.. திக்விஜய சிங் பேசிய ஆடியோவை வெளியிட்ட பா.ஜ.க… சிக்கலில் காங்கிரஸ்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காஷ்மீரின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதை மறுபரிசீலனை செய்யும் என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய சிங், பாகிஸ்தான் செய்தியாளரிடம் பேசிய ஆடியோ ஒன்றை...
- Advertisment -
TopTamilNews