பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்ற போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் :  பட்டம் வென்ற போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டம் பெறுவது என்பது டென்னிஸ் ஆடும் ஒவ்வொரு வீரரின் கனவு. தற்போது பாரிஸ் நகரில் மிக கோலாகலமாகவும் அதேநேரம் கொரோனா வைரஸ் பரவலால் பாதுகாப்பாகவும் நடைபெற்று வருகிறது,

மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து நாட்டைச் சேர்ந்த இகா ஸ்விகாடெக், அமெரிக்க வீராங்கனை சோபியா கெனினோடு மோதினார். அமெரிக்க வீராங்கனை தர வரிசைப்பட்டியலில் 4 இடத்தில் இடம்பெற்றவர். அதனால், இகாவை வெல்வது எளிதாக இருக்கும். எனவே பட்டம் சோபியாவுக்கே என்றும் பலர் கணித்தார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் :  பட்டம் வென்ற போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்

ஆனால், மைதானத்தில் தன் புயல் வேக ஆட்டத்தை வெளிப்படுத்தினார் இகா ஸ்வியாடெக். முதல் இரண்டு செட்களிலும் 6;1, 6;1 எனும் கணக்கில் வென்று பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை வென்றார் போலந்து நாட்டின் வீராங்கனை இகா ஸ்வியாடெக்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் :  பட்டம் வென்ற போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்

போலந்து நாட்டிலிருந்து இந்தப் பட்டம் முதல் வீராங்கனை இகா என்பது இன்னொரு பெருமை. இகாவின் தந்தை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டவர். இகாவுக்கு தற்போது வயது 19 தான். மிக இளவயதில் பட்டம் வென்றதோடு, நேர் செட்களில் வென்றதும் பல்வேறு சாதனைகளில் இகாவின் பெயரை இடம்பெற வைத்திருக்கிறது.