பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : அதிரடி ஆட்டம்… நடால் சாம்பியன்

 

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : அதிரடி ஆட்டம்… நடால் சாம்பியன்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரீஸ் நகரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார் ஸ்பெயி நாட்டு வீரர் ரஃபேல் நடால்.

இந்தத் தொடர் தொடங்கியபோதே இந்த இருவருமே இறுதியில் மோதுவார்கள் என்பதைப் பலரும் கணித்திருந்தார்கள். அதனால், யார் வெல்வதும் எளிதாக இருக்காது என்பதே உண்மை.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : அதிரடி ஆட்டம்… நடால் சாம்பியன்

ஆட்டம் தொடக்கம் முதலே நடால் தனது நேர்த்தியன ஆட்டத்தை வெளிப்பத்தினார். முதல் 6:0, 6;2, 7;5 எனும் செட் கணக்கில் தனது ஆக்ரோஷமான ஆட்டத்திறனால் வென்றார் நடால்.

ஏற்கெனவே 12 முறை பிரெஞ்சு ஓபன் பட்ட வென்ற நடால், இந்த ஆண்டின் வெற்றிமூலம் 13 வது முறையாக சாம்பியனானார்.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : அதிரடி ஆட்டம்… நடால் சாம்பியன்

நடால், விம்பிள்டனின் இருமுறையும், அமெரிக்க ஓபன் டென்னிஸில் நான்கு முறையும் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தையும் ஒரு முறை வென்றிருக்கிறார்.

பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை வென்றார் போலந்து நாட்டின் வீராங்கனை இகா ஸ்வியாடெக்.