இந்த மாத இறுதிக்குள் இந்தியாவுக்கு வருகிறது ரபேல் போர் விமானங்கள்…. பிரான்ஸ் தூதர் தகவல்

 

இந்த மாத இறுதிக்குள் இந்தியாவுக்கு வருகிறது ரபேல் போர் விமானங்கள்…. பிரான்ஸ் தூதர் தகவல்

2016ல் பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு வாங்க பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு நிர்ணயித்த விலையைக் காட்டிலும் அதிக விலைக்கு டசால்ட் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை வழங்கியுள்ளதாக அந்த கட்சி குற்றச்சாட்டியது. மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்தது. ஆனால் ரபேல் விவகாரத்தில் எந்தவித முறைகேடுகளும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த மாத இறுதிக்குள் இந்தியாவுக்கு வருகிறது ரபேல் போர் விமானங்கள்…. பிரான்ஸ் தூதர் தகவல்

இதற்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் தேதியன்று பிரான்ஸின் விமானபடை தளத்தில் முதல் ரபேல் விமானத்தை நமது பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொண்டார். டசால்ட் நிறுவனம் மத்திய அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின்படி, 2020 மே மாத இறுதிக்குள் முதலில் 4 ரபேல் போர் விமானங்களை நம் நாட்டுக்கு டெலிவரி செய்ய வேண்டும். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸில் லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டதால் டசால்ட் தயாரிப்பு ஆலை மூடப்பட்டது. இதனால் இந்தியாவுக்கான ரபேல் போர் விமானங்கள் டெலிவரி தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த மாத இறுதிக்குள் இந்தியாவுக்கு வருகிறது ரபேல் போர் விமானங்கள்…. பிரான்ஸ் தூதர் தகவல்

ஆனால் இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்கள் டெலிவரி செய்வதில் தாமதம் ஏற்படாது என பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லெனெய்ன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ரபேல் போர் விமானங்களின் ஒப்பந்த விநியோக அட்டவணை இப்போது வரை மதிக்கப்படுகிறது. மற்றும் உண்மையில், ஒப்பந்தத்துக்கு இணங்க கடந்த ஏப்ரலில் பிரான்ஸில் வைத்து இந்திய விமான படையிடம் ஒரு புதிய விமானம் ஒப்படைக்கப்பட்டது. பிரான்ஸிலிருந்து இந்தியாவுக்கு முதல் 4 ரபேல் போர் விமானங்களை அனுப்பவதற்கான விமானத்தை சீக்கிரம் ஏற்பாடு செய்வதற்காக இந்திய விமானப்படைக்கு உதவுகிறோம். எனவே ஒப்பந்தப்படி டெலிவரி பராமரிக்கப்படாது என்று சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.