‘நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க’ கைதிகளுக்கு யோகா வகுப்பு… ஈஷா அறக்கட்டளை அசத்தல்!

‘நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க’ கைதிகளுக்கு யோகா வகுப்பு… ஈஷா அறக்கட்டளை அசத்தல்!

உலகையே உலுக்கி எடுத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, மக்கள் தங்களை காத்துக் கொள்ள ஒரே வழி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வது தான். இதற்காகவே தமிழகத்தில் அரசு சார்பில் கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் சிறைக் கைதிகளுக்கு ஈஷா அறக்கட்டளை சார்பில் சிறப்பு யோகா வகுப்புகள் நடத்தப்டுகின்றன.

‘நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க’ கைதிகளுக்கு யோகா வகுப்பு… ஈஷா அறக்கட்டளை அசத்தல்!

தமிழகம் முழுவதிலும் உள்ள மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகள் உட்பட மொத்தம் 18 சிறைகளில் கடந்த 19ம் தேதி (நேற்று) சிறப்பு யோகா வகுப்புகள் தொடங்கின. ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் இந்த வகுப்புகள் வரும் 29ம் தேதி வரை சத்குருவாள் பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்களால் நடத்தப்படவுள்ளது.

‘நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க’ கைதிகளுக்கு யோகா வகுப்பு… ஈஷா அறக்கட்டளை அசத்தல்!

இந்த இக்கட்டான சூழலில் கைதிகள் மற்றும் காவலர்களின் மன நலனை மேம்படுத்தும் விதமாக உப யோகா மற்றும் நமஸ்கார் யோகா உள்ளிட்ட சக்திவாய்ந்த பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம், அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு மன மனதளவில் சமநிலை உருவாகும். கைதிகளுக்காகவே ஈஷா யோகா சார்பில் கடந்த 28 வருடங்களாக இது போன்ற சிறப்பு வகுப்புகள் நடத்தப்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.