பவானியில் சிபிஐ, தனியார் மருத்துவமனை சார்பில் இலவச தடுப்பூசி முகாம்!

 

பவானியில் சிபிஐ, தனியார் மருத்துவமனை சார்பில் இலவச தடுப்பூசி முகாம்!

ஈரோடு

பவானியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச தடுப்பூசி முகாமில் 60 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானியில் தனியார் மருத்துவமனை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் இணைந்து நேற்று இலவச தடுப்பூசி செலுத்தும் முகாமை நடத்தினர். பவானி அசோக் கிருஷ்ணா மருத்துவமனையில் நடந்த இந்த முகாமிற்கு, மருத்துவமனை தலைவர் மருத்துவர் நடராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் ப.பா.மோகனின் மகளும், சுவிட்சர்லாந்து வாழ் தமிழருமான பி.எம்.பிரீத்தி லதா ஆகியோரது பங்களிப்போடு 65 பேருக்கு இலவசமாக கோவிஷீல்டு தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டது.

பவானியில் சிபிஐ, தனியார் மருத்துவமனை சார்பில் இலவச தடுப்பூசி முகாம்!

மருத்துவர் எம்.நடராஜன் தலைமையில் தடுப்பூசி முகாமை வழக்கறிஞர் ப.பா.மோகன் துவக்கி வைத்தார். இந்த முகாமில் ரூ.50,700 மதிப்புள்ள 65 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இலவசமாக போடப்பட்டது. முகாமினை நடத்திய மருத்துவர் எம்.நடராஜன் மற்றும் நிதி அளித்த பி.எம்.பிரீத்திலதா ஆகியோருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த தடுப்பூசி முகாமில், சிபிஐ ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், நகர செயலாளர் ப.மா.பாலமுருகன், மாவட்ட குழு உறுப்பினர் கே.சந்திரசேகர், இளைஞர் பெரு மன்ற மாவட்ட செயலாளர் எம்.ஆர்.சுரேஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.