ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வழங்கும் தேதி அறிவிப்பு!

 

ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வழங்கும் தேதி அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதனால் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அரசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச ரேஷன் பொருட்களை வழங்கி வருகிறது. ஒரு கிலோ சர்க்கரை, அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பை கடந்த 3 மாதங்களாக அரசு இலவசமாக கொடுத்து வருகிறது.

ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வழங்கும் தேதி அறிவிப்பு!

இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான இலவச ரேஷன் பொருட்களை மக்கள் பெற்றுக் கொள்ளும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, வரும் மே 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை மக்களின் வீடுகளிலேயே டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் ஜூன் 1 ஆம் தேதி முதல் டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியின் படி மக்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்கள் ரேஷன் கடைகளுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.