செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு இந்த நாட்களில் டோக்கன்கள் விநியோகம்!

 

செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு இந்த நாட்களில் டோக்கன்கள் விநியோகம்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. இதிலிருந்து மக்களை மீட்டெடுக்க அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த விளைவாக தற்போது பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. இந்த கொரோனா பாதிப்பால் வேலையில்லாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கியதால், பல குடும்பங்கள் உணவுக்கு கஷ்டப்படும் சூழல் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல், லாக்டவுன் நீடிக்கப்பட்டுக் கொண்டே வந்ததால் பலர் வேலையிழக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது.

செப்டம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களுக்கு இந்த நாட்களில் டோக்கன்கள் விநியோகம்!

இவ்வாறு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்ட அரசு கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது. அதே போல, 2 மாதத்திற்கு ரூ.1000 நிவாரணத்தொகையும் வழங்கியது. இந்த நிலையில், செப்டம்பர் மாதத்திற்கான இலவச டோக்கன்கள் வழங்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 29,30,31 மற்றும் செப்.1 ஆம் தேதிகளில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பணியாளர்கள் டோக்கன் வழங்குவார்கள் என்றும் ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் டோக்கன் வழங்க வேண்டும் என்றும் டோக்கனில் குறித்த நாள், நேரத்தில் மட்டுமே பொருட்கள் வாங்க வர வேண்டும் என்றும் நுகர்பொருள் வாணிபக்கழகம் அறிவித்துள்ளது.