Home உலகம் அமெரிக்காவில் இலவசம் – கட்டுக்கடங்காமல் குவிந்த மக்கள்

அமெரிக்காவில் இலவசம் – கட்டுக்கடங்காமல் குவிந்த மக்கள்

கொரோனாவின் பாதிப்பு மாநகரங்கள் தொடங்கி சின்னச் சின்ன குக்கிராமங்கள் வரை நீண்டு விட்டது. உலகமே கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்த்து காத்துகிடக்கிறது.

அமெரிக்காவில் இலவசம் – கட்டுக்கடங்காமல் குவிந்த மக்கள்

கொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்தே அமெரிக்காவில் கொரோனாவின் பரவல் மிக அதிகம். இதுவரை அமெரிக்காவில் 1,20,70,712 பேரும், இந்தியாவில் 90,04,365 பேரும், பிரேசில் நாட்டில்  59,83,089 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர். நேற்று மட்டுமே அமெரிக்காவில் 1.92,186 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவில் இலவசம் – கட்டுக்கடங்காமல் குவிந்த மக்கள்

அமெரிக்காவின் டெக்ஸாஸ், கலிபோர்னியா, ப்ளோரிடா ஆகிய மாகாணங்களே அதிக கொரோனா நோயாளிகள் உள்ளவை ஆகும். ஆனால், தற்போது அதிவேகமாக கலிபோர்னியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதுவரை கலிபோர்னியாவில் 10 லட்சத்து 80 ஆயிரத்து 261 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்களில் 18 ஆயிரத்து 565 பேர் இறந்திருக்கிறார்கள்.

இதனால், கலிபோர்னியாவில் இலவசமாக கொரோனா டெஸ்ட் எடுக்க முடிவெடுத்தது அந்நாட்டு அரசு. அதன்படி கொடுப்பட்ட அறிவிப்பைப் படித்த மக்கள் உடனே கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு விரைந்தனர்.

அமெரிக்காவில் இலவசம் – கட்டுக்கடங்காமல் குவிந்த மக்கள்

ஏராளமானோர் தங்கள் கார்களில் வந்து குவிய, கார் நிறுத்தவே இடம் போதவில்லையாம். ஒரே நேரத்தில் இத்தனை பேர் வருவார்கள் என எதிர்பார்க்க வில்லை. அதனால், மருத்துவ முன்களப் பணியாளர்கள் திணறிவருகின்றனர்.

கலிபோர்னியாவில் சனிக்கிழமை முதல் லாக்டெளன் அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. காரணம், அங்கு சமீப நாட்களாக வேகமாக கொரோனா தொற்று பரவுகிறது என்பதால்.

அமெரிக்காவில் இலவசம் – கட்டுக்கடங்காமல் குவிந்த மக்கள்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

கொரோனா கோர தாண்டவம்… 38 கர்ப்பிணிகள் மரணம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கோரதாண்டவம் ஆடுகிறது. முதல் அலை வயதானவர்களையும் குழந்தைகளையுமே அதிகமாக தாக்கிய நிலையில் இரண்டாம் அலை பாரபட்சமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும்...

திருப்பூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது, ஆக்சிஜன் பேருந்து!

திருப்பூர் திருப்பூரில் தொண்டு நிறுவனங்களின் சார்பில் வடிவமைக்கப்பட்ட ஆக்சிஜன் பேருந்து, இன்று முதல் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா...

சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது… முதலீட்டாளர்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி நஷ்டம்

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. சென்செக்ஸ் 42 புள்ளிகள் உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன்...

அவர வரச் சொல்லுங்க… காவலாளியை நேரில் அழைத்து பாராட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதால் அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின்...
- Advertisment -
TopTamilNews