ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

 

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று புதிதாக 6,986 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 94,695 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் தமிழக மக்களை நோய்த் தொற்றில் இருந்து காக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்கும் திட்டத்தை இன்று காலை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச மாஸ்க்: அமைச்சர் காமராஜ் அறிவிப்பு

இந்த நிலையில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்கப்படும் என்று அமைச்சர் காமராஜ் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 1,3,4 ஆம் தேதிகளில் வீட்டிற்கே சென்று மாஸ்க்கிற்கான டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் டோக்கனை கொண்டு சென்று மக்கள் 5 ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்களுடன் இலவசமாக மாஸ்க்கையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.