மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மறுவாழ்வு இல்லத்தினர்…

 

மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மறுவாழ்வு இல்லத்தினர்…

தூத்துக்குடி

தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் தனியார் மறுவாழ்வு இல்லம் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகள் ஜோடிகளுக்கு, சீர் வரிசைகளுடன் இலவச திருமணம் நடைபெற்றது.

தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் தனியார் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லம் சார்பில் ஆண்டுதோறும் 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்விக்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பெண் வீட்டார் விருப்பத்தின் படி தேர்வுசெய்யப்பட்ட 5 மணமகன்களுடன் கடந்த 15ஆம் தேதி அன்று நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இன்று மறுவாழ்வு மையத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு இலவச திருமணம்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மறுவாழ்வு இல்லத்தினர்…

இந்த திருமண விழாவில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி மேற்கொண்டு மணமக்களுக்கு தாலியை எடுத்துக்கொடுத்தார். இதனை தொடர்ந்து, 5 ஜோடிகளுக்கும் உற்றார், உறவினர்கள் சூழ திருமணம் நடைபெற்றது. திருமணமான மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு மறுவாழ்வு இல்லம் சார்பில் தலா 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் வீட்டார் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.