அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு 73 வகை சீர்வரிசைகளுடன் இலவச திருமணம்!

 

அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு 73 வகை சீர்வரிசைகளுடன் இலவச திருமணம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோவையில் இன்று 123 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு 73 வகை சீர்வரிசைகளுடன் இலவச திருமணம்!

வரும் 24ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதனால் அதிமுக சார்பில் ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து கோவையில் 123 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவான நிலையில் திருமணத்தில் பங்கேற்க தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு 73 வகை சீர்வரிசைகளுடன் இலவச திருமணம்!

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் இன்று நடைபெற்றது. கோவை பச்சாபாளையத்தில் நடந்த திருமணத்தை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் நடத்தி வைத்தனர். 123 ஜோடிகளுக்கும் அதிமுக சார்பில் 73வகை சீர்வரிசை பொருட்களை முதல்வர், துணை முதல்வர் வழங்கினர்.திருமணத்தில் பங்கேற்ற மணமக்களின் உறவினர்கள், பொதுமக்களுக்கு விருந்து அளிக்கப்பட்டுள்ளது.