Home தமிழகம் கோவை அம்மா உணவகங்களில் 5 ஆம் கட்ட ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு!

கோவை அம்மா உணவகங்களில் 5 ஆம் கட்ட ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு!

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கினால் ஏழை, எளிய மக்கள் வருமானமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏழைகள், ஆதரவற்றோர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மக்களுக்கு உதவும் பொருட்டு, அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, அம்மா உணவகங்கள் தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்களுக்கு பசியாற்றி வந்தது. குறிப்பாக சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு போடப்பட்டதில் இருந்து இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

கோவை அம்மா உணவகங்களில் 5 ஆம் கட்ட ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு!

கோவை அம்மா உணவகங்களில் 5 ஆம் கட்ட ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு!

இந்நிலையில் கோவையில் இன்று முதல் 5 ஆம் கட்ட ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மே மாதத்தோடு அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உணவுக்கு கட்டணம் வசூலிக்க படுவதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு இலவச உணவு வழங்க கோவை ஆட்சியர் ராஜாமணியிடம், அமைச்சர் வேலுமணி ரூ.87 லட்சம் வழங்கியிருக்கிறார்.

கோவை அம்மா உணவகங்களில் 5 ஆம் கட்ட ஊரடங்கு முடியும் வரை இலவச உணவு!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸில் காத்திருந்த 6 பேர் பலி!

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்தவர்களில் 6 பேர் உயிரிழந்தார். சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மொத்தமுள்ள...

ரொம்ப டேஞ்சரஸ்..ஆவி புடிச்சுகிட்டு இருக்கேன்…நடிகர் செண்ட்ராயன்

நடிகர் செண்ட்ராயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர்...

விடுதலைப்புலிகளை வெளிப்படையாக ஆதரித்து பல எதிர்வினைகளும், எதிர்ப்புகளும் வந்தபோதும்… சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ’’தமிழ்த்தேசிய சிந்தனையாளரும், சமூகநீதி போராளியுமான பெருமதிப்பிற்குரிய அருட்தந்தை ஜான் சுரேசு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், மனக்கவலையும் அடைந்தேன். அவரது...
- Advertisment -
TopTamilNews