சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கும் திட்டம் நிறுத்தம்!

 

சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கும் திட்டம் நிறுத்தம்!

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கினால் ஏழை, எளிய மக்கள் வருமானமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏழைகள், ஆதரவற்றோர், வெளிமாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு மக்களுக்கு உதவும் பொருட்டு, அம்மா உணவகங்களில் ஊரடங்கு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, அம்மா உணவகங்கள் தினந்தோறும் நூற்றுக் கணக்கான மக்களுக்கு பசியாற்றி வந்தது. குறிப்பாக சென்னையில் 15 மண்டலங்களில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் ஊரடங்கு போடப்பட்டதில் இருந்து இலவசமாக உணவு வழங்கப்பட்டு வந்தது.

சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கும் திட்டம் நிறுத்தம்!

இந்நிலையில் அம்மா உணவகங்களில் இலவசமாக வழங்கப்பட்டு வந்த உணவை சென்னை மாநகராட்சி நிர்வாகம் நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. சென்னையில் நான்காம் கட்ட ஊரடங்கு முடியும் வரை, அதாவது மே மாதம் 31 ஆம் தேதி வரை மட்டுமே இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 5 ஆம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் இலவச உணவு குறித்து எந்த அறிவிப்பும் வராததால் சென்னை அம்மா உணவகங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ஊரடங்கு காலத்தில் ஒரு கோடி பேர் விலையில்லா உணவை சாப்பிட்டு பயன் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.