விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும்- மின்வாரியம் அறிவிப்பு!

 

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும்- மின்வாரியம் அறிவிப்பு!

தற்போது விவாசாயத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மின் இணைப்புகளின் பயன்பாட்டை அறிய மீட்டர் கருவி பொருத்தும் பணி நடைபெற்றது. மின் இணைப்புக்கு கட்டணம் வாங்க தான் அந்த மீட்டர் பொருத்தப்படுகிறது என்று விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதே போல, விவசாயிகள் 5 குதிரை திறனுக்கு மேல் மோட்டார் பயன்படுத்தினால் ரூ.20,000 செலுத்த வேண்டும் என்றும் மின்வாரியம் அறிவித்தது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக கடலூர் மாவட்ட விவசாயிகள் இலவச மின் இணைப்புக்கு கட்டணம் வசூலிக்கப்படுமோ என்ற அதிர்ச்சியில் இருந்தனர்.

விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடரும்- மின்வாரியம் அறிவிப்பு!

இந்நிலையில், விவசாயத்திற்கு மின்வாரியம் தொடர்ந்து இலவசமாக மின்சாரத்தை வழங்கும் என்று மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், விவசாயத்திற்கு எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறிந்துக் கொள்ளவே மீட்டர்கள் பொருத்தப்பட்டதாகவும், இலவச மின்சாரம் வழங்கும் போது மீட்டர் பொருத்தும் நடைமுறை வழக்கமானது தான் என்றும் இரண்டு ஆண்டுகளாக இம்முறை அமலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.