பிரதமரின் இலவச எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

 

பிரதமரின் இலவச எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

கடந்த 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், கிராம புறங்களில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக எரிவாயு வழங்கப்படும் என்றும் ஆனால் அந்த குடும்பத்தில் ஏற்கனவே மின் இணைப்பு இருக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பல மக்கள் இலவச எரிவாயு இணைப்பு பெற்று பயன் பெற்றனர்.

பிரதமரின் இலவச எரிவாயு வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

நாடு முழுவதும் 715 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட இந்த உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயன்பெறும் பயனாளிகளுக்கு, கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஜூன் 2020 வரை இலவசமாக சமையல் எரிவாயு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். மேலும், வருங்கால வைப்பு நிதி 24% வழங்கப்படும் திட்டத்தை அடுத்த 3 மாதங்களுக்கு நீடிப்பது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு அக்கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.