’இலவச கொரோனா தடுப்பூசி’ ஜோ பைடன் அறிவிப்பு

 

’இலவச கொரோனா தடுப்பூசி’ ஜோ பைடன் அறிவிப்பு

நவம்பர் -3 –ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் இருதரப்பு பிரசாரத்தில் அனல் பறக்கிறது.

குடியரசுக் கட்சி சார்ப்பில் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபர் போட்டியில் குதிக்கிறார். ஜனநாயக் கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் ஜோ பிடன். துணை அதிபராக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரீஸைத் தேர்வு செய்யப்படிருக்கிறார்.

’இலவச கொரோனா தடுப்பூசி’ ஜோ பைடன் அறிவிப்பு

ட்ரம்ப் – ஜோ பைடன் இருவரும் நேருக்கு நேர் கலந்துகொள்ளும் விவாதங்கள் இதுவரை இரண்டு முறை நடந்திருக்கிறது. அதில் இரு தரப்பிலும் காரசாரமான வாதங்கள் பரிமாறப்பட்டன.

ஜோ பைடன் தற்போதைய அதிபர் ட்ரம்ப் மீது வைக்கும் முக்கியமான குற்றச்சாட்டு கொரோனாவை மிக அலட்சியமாகக் கையாண்டார் ட்ரம்ப் என்பதே. அந்தக் குற்றச்சாட்டுக்கு வலுவேற்றும் விதமாக அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் 2 லட்சத்தைக் கடந்து விட்டது.

’இலவச கொரோனா தடுப்பூசி’ ஜோ பைடன் அறிவிப்பு

இந்நிலையில் தற்போது பிரசாரத்தில் கலந்துகொண்ட ஜோ பைடன், “நான் தேர்தலில் வெற்றி பெற்று, அமெரிக்க அதிபரானால், அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக அளிப்பேன்” என்ற வாக்குறுதி அளித்துள்ளார்.