இலவச கொரோனா தடுப்பூசி – அறிவித்திருக்கும் இன்னொரு நாடு எது தெரியுமா?

 

இலவச கொரோனா தடுப்பூசி – அறிவித்திருக்கும் இன்னொரு நாடு எது தெரியுமா?

கொரோனாவின் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கட்டுக்கடங்காமல் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 55 லட்சத்து 36 ஆயிரத்து 642 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 53 லட்சத்து 77 ஆயிரத்து 278 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 15 லட்சத்து 11 ஆயிரத்து 927 பேர். தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,86,47,437 பேர்.

இலவச கொரோனா தடுப்பூசி – அறிவித்திருக்கும் இன்னொரு நாடு எது தெரியுமா?

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, கொரோனா தடுப்பூசி மட்டுமே தீர்வு எனும் நிலைக்கு உலக நாடுகள் சென்றுவிட்டன. ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைக் கண்டறிந்தது. அடுத்தடுத்து பல நாடுகளின் கண்டுபிடிப்புகள் வெளியாகின.

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை பிரிட்டன் நாட்டில் மக்களுக்குச் செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனூலம், உலகின் முதன்முதலாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரப்போகும் தடுப்பூசி இதுவே.

இலவச கொரோனா தடுப்பூசி – அறிவித்திருக்கும் இன்னொரு நாடு எது தெரியுமா?

ஜப்பான் நாட்டில், அனைத்து மக்களுக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அனைத்து உறுப்பினர்களும் அதை ஏற்றுக்கொள்ள, அனைவருக்கு இலவச தடுப்பூசி என்று அறிவிக்கப்பட்டது. இதே முடிவை இன்னொரு நாடும் எடுத்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் (Jean Castex), ’தம் நாட்டின் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

இலவச கொரோனா தடுப்பூசி – அறிவித்திருக்கும் இன்னொரு நாடு எது தெரியுமா?

பிரான்ஸில் தற்போது கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அங்கு மொத்த பாதிப்பு 22, 57,331 பேர். இவர்களில் 1,66,940 மட்டுமே குணமடைந்துள்ளனர். 54,140 பேர் இறந்துள்ளார்கள்.

அதனால், பிரான்ஸ்க்கு கொரோனா தடுப்பூசி மிகவும் அவசியம் மட்டுமல்ல அவசரமும்கூட. அதனால்தான் பிரதமர் 200 மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசி வாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக ஒன்றரை பில்லியன் யூரோ செலவிடமும் தயாராக உள்ளார்.