மாற்றுத் திறனாளிகளுக்கான ‘இலவச பஸ் பாஸ்’ எங்கே பெறலாம்?!

 

மாற்றுத் திறனாளிகளுக்கான ‘இலவச பஸ் பாஸ்’ எங்கே பெறலாம்?!

மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸை எங்கே பெற வேண்டும் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கிட்டத்தட்ட 5 மாதங்களாக பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்தது. அதன் பின்னர், பணிக்குச் செல்லும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதே போல பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் குழுவும் பரிந்துரைத்தது. இதனையடுத்து பேருந்துகளை இயக்க அரசு ஒப்புதல் அளித்ததன் பேரில் கடந்த 1 ஆம் தேதியில் இருந்து மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் வரும் 7 ஆம் தேதியில் இருந்து மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மாற்றுத் திறனாளிகளுக்கான ‘இலவச பஸ் பாஸ்’ எங்கே பெறலாம்?!

இதனிடையே ஊரடங்கு போடுவதற்கு முன்னர், அதாவது கடந்த மார்ச் மாதம் பஸ் பாஸ் பெற்றவர்கள் அதனை வரும் 15 ஆம் தேதி வரை உபயோகித்துக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது. இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வழங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸை எப்படி பெற வேண்டும் என மேலாண் இயக்குனர் கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்களை அணுகி பாஸ் பெறலாம் என்றும் மேலும் விவரங்களுக்கு promtc123@gmail.com என்ற இணைய தள முகவரியிலும், 044-2345 5801 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.