`விளம்பரத்தை பார்த்தேன்; நானே வாங்கிக் கொள்கிறேன்!’- காருடன் எஸ்கேப் ஆன ஆசாமி 3 மாதத்துக்கு பிறகு சிக்கினான்

 

`விளம்பரத்தை பார்த்தேன்; நானே வாங்கிக் கொள்கிறேன்!’- காருடன் எஸ்கேப் ஆன ஆசாமி 3 மாதத்துக்கு பிறகு சிக்கினான்

“உங்க விளம்பரத்தை பார்த்தேன். காரை ஓட்டி பார்த்து வாங்கிக்கொள்கிறேன்” என்று கூறி காருடன் எஸ்கேப் ஆன ஆசாமியை 3 மாதங்களுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரை சேர்ந்தவர் சாய் சுப்பிரமணி. இவர் தனது காரை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த பொழிச்சலூரை சேர்ந்த பால்ராஜ் என்பவர் சாய் சுப்பிரமணிக்கு போன் செய்துள்ளார். அப்போது, காரை ஓட்டி பார்த்து வாங்கி கொள்வதாக கூறியுள்ளார். அதோடு, மதுரவாயலில் எனது நண்பர் இருப்பதாகவும், அவரிடம் பணம் இருப்பதாகவும், அதை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார் பால்ராஜ்.

இதையடுத்து, சேலையூர் வந்த பால்ராஜ், சுப்பிரமணியை சந்தித்துள்ளார். அப்போது, இருவரும் சேர்ந்து காரில் மதுரவாயலுக்கு சென்றுள்ளனர். கார் மதுரவாயலை நெருங்கிக் கொண்டிருந்த போது, வழியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தனது நண்பர் இருப்பதாகவும், அவரை அவரை அழைத்து வருமாறும் சுப்பிரமணியிடம் கூறியுள்ளார் பால்ராஜ். இது உண்மை என நம்பிய சாய் சுப்பிரமணி காரில் இருந்து இறங்கியுள்ளார். பின்னர் காரை எடுத்துக்கொண்டு பால்ராஜ் பறந்துவிட்டார். நீண்ட நேரம் காத்திருந்து பார்த்த சுப்பிரமணி, பால்ராஜ் செல்போன் நம்பருக்கு போன் செய்துள்ளார். போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது.

`விளம்பரத்தை பார்த்தேன்; நானே வாங்கிக் கொள்கிறேன்!’- காருடன் எஸ்கேப் ஆன ஆசாமி 3 மாதத்துக்கு பிறகு சிக்கினான்

பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட சுப்பிரமணி, மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பால்ராஜை பிடிக்க வலை வீசி தேடினர். இந்த சம்பவம் நடந்து 3 மாதங்களுக்கு பிறகு தலைமறைவான பால்ராஜை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை செய்த காவல்துறையினர், பல்வேறு பெயர்களை வைத்துக்கொண்டு பால்ராஜ் ஏமாற்றியது தெரியவந்தது. இவரால் வேறு யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.