ஈரோட்டிலும் கிசான் திட்டத்தில் மோசடியா? ஆட்சியர் ஆய்வு செய்ய கோரிக்கை

 

ஈரோட்டிலும் கிசான் திட்டத்தில் மோசடியா? ஆட்சியர் ஆய்வு செய்ய கோரிக்கை

பிரதம மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தில்முறைகேடு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் மூலம் மனு

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் விவசாய பிரிவு சார்பில் மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து அங்குள்ள புகார் பெட்டியில் மனு போட்டனர்.

அந்த மனுவில், ’’பாரதப் மந்திரி வேளாண்மை உதவி திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 9.5 கோடி விவசாயிகள் வருகின்றனர். நான்கு மாதத்திற்கு ஒரு முறை ரூ 2000 என்று ஆண்டுக்கு 6 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில தமிழகத்தில் 40 லட்சம் விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இந்த திட்டத்தில் பல்வேறு இடங்களில் மோசடி நடந்துள்ளது.

ஈரோட்டிலும் கிசான் திட்டத்தில் மோசடியா? ஆட்சியர் ஆய்வு செய்ய கோரிக்கை

கடலூர் , விழுப்புரம் , திருவண்ணாமலை, கள்ளகுறிசி , காஞ்சிபுரம் , வேலூர், கரூர் , கோவை போன்ற மாவட்டங்களில் திடீரென ஒவ்வொரு மாவட்டத்திலும் 40,000 முப்பதாயிரம் பேர் என புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் அல்லாத பல்லாயிரக்கணக்கானோர் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டு இருப்பது மிகப் பெரும் மோசடி ஆகும்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திலும் இந்தத் திட்டத்தில் மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால், ஈரோடு மாவட்ட கலெக்டர் தீவிரமாக ஆய்வு செய்து இதில் மோசடி நடந்து இருப்பின் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும்’’என்று கூறியுள்ளனர்.

விவசாய பிரிவு மாநிலச் செயலாளர் சித்ரா கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், பிரச்சார அணி சரவணன் , மாவட்ட பொதுச்செயலாளர்கள் குணசேகரன் ஈஸ்வரமூர்த்தி, மகளிர் அணித் தலைவி புனிதம் உள்பட நிர்வாகிகள் உடனிருந்தனர் .