ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்: சர்ச்சையில் சிக்கிய முதல் பரிசு பெற்ற நபர்!

ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்: சர்ச்சையில் சிக்கிய முதல் பரிசு பெற்ற நபர்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம் செய்த நபர் முதல் பரிசு பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கடந்த 16ம் தேதி கோலாகமாக நடத்தப்பட்டது. போட்டியின் முடிவில், முதல் பரிசு பெற்ற கண்ணன் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டில் மோசடி நடைபெற்றிருப்பதாக இரண்டாம் பரிசு பெற்ற கருப்பண்ணன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்: சர்ச்சையில் சிக்கிய முதல் பரிசு பெற்ற நபர்!

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருப்பண்ணன், ஜல்லிக்கட்டு தொடங்கி முதல் 3 சுற்றுகளில் பங்கேற்ற ஹரிகிருஷ்ணன் 5 காளைகளை பிடித்ததாகவும், 3 ஆம் சுற்றின் போது அவர் காயமடைந்ததால் களத்தில் இருந்து வெளியேறியதாகவும் 33 எண் கொண்ட அவரது டீ சர்ட்டை வாங்கிக் கொண்ட கண்ணன் ஜல்லிக்கட்டு போட்டிக்கு பதிவு செய்யாமலேயே களத்திற்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தார். மேலும், ஹரிகிருஷ்ணன் அடக்கிய 5 காளைகளுடன் கண்ணன் அடக்கிய 8 காளைகளை சேர்த்து அவருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

ஜல்லிக்கட்டில் ஆள்மாறாட்டம்: சர்ச்சையில் சிக்கிய முதல் பரிசு பெற்ற நபர்!

இது குறித்து பேசிய மற்றொரு மாடுபிடி வீரர், ஜல்லிக்கட்டில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி ஆட்சியர் முதல் பரிசை கருப்பணனுக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.