அதிமுக ஆட்சியில் உணவு வழங்குவதில் முறைகேடா? அமைச்சர் பரபரப்பு தகவல்!

 

அதிமுக ஆட்சியில் உணவு வழங்குவதில் முறைகேடா? அமைச்சர் பரபரப்பு தகவல்!

அதிமுக ஆட்சியில் மருத்துவர், செவிலியருக்கு உணவு வழங்கியதில் முறைகேடு நடந்ததா என விசாரணை நடத்தப்படுவதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் உணவு வழங்குவதில் முறைகேடா? அமைச்சர் பரபரப்பு தகவல்!

சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், கடந்த அதிமுக ஆட்சியில் தினமும் ஒரு நபருக்கு உணவு தொகை ரூ.600 செலவு செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அதில் முறைகேடு ஏதேனும் நடந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பணியிலிருக்கும் மருத்துவர், செவிலியருக்கு ஒரு நாள் உணவு செலவை தமிழக அரசு தற்போது ரூ.350 முதல் ரூ.450 ஆக நிர்ணயம் செய்துள்ளது. உணவு விலை நிர்ணயித்ததால் அரசுக்கு தினமும் ரூ.30 லட்சம் மிச்சமாகிறது. அதிகமாக வசூலிக்கப்பட்ட மருத்துவர், செவிலியருக்கானன தங்கும் அறை வாடகையும் குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நீட் தேர்வு குறித்து பேசிய அமைச்சர், நீட் தேர்வு பாதிப்பு பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில் ஆலோசனை செய்து நீட் தேர்வு விலக்கு பற்றி முடிவு செய்யப்படும் என்று கூறினார்.