பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை மாற்றி தருவதாக மோசடி… 22 பேர் கும்பல் கைது…

 

பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை மாற்றி தருவதாக மோசடி… 22 பேர் கும்பல் கைது…

கோவை

பொள்ளாச்சியில் அதிர்ஷ்டக்கல் மற்றும் பழைய 500, 1000 ஆயிரம் நோட்டுக்களை மாற்றித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட முயன்ற 22 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் ரியாஸ். இவர் புதிய பேருந்துநிலையம் பின்புறம் செல்போன் உதரிபாக கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி ரியாஸை, உசிலம்பட்டியை சேர்ந்த மூக்கையா, திருப்பூரை சேர்ந்த அப்பாஸ் மந்திரி, திண்டுக்கல்லை சேர்ந்த ராஜ்குமார் ஆகியோர் சந்தித்து உள்ளனர். அப்போது, தாங்கள் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழயை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை கேரளாவில் இருந்து பெற்று, தமிழகத்தில் வங்கி அதிகாரி மூலம் புதிய நோட்டுக்களாக மாற்றித் தருவதாகவும், அதேபோல் தங்களிடம் உள்ள அதிர்ஷ்டக்கல்லை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என்றும் கூறியுள்ளனர்.

பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை மாற்றி தருவதாக மோசடி… 22 பேர் கும்பல் கைது…

மேலும், பணம் மற்றும் அதிர்ஷ்டக்கல் வேண்டுமென்றால் 5 லட்சம் ரூபாய் பணம் வழங்க வேண்டுமென தெரிவித்த அவர்கள், இந்த சந்திப்பிற்காக 5 ஆயிரம் ரூபாய் பணத்தையும் அவரிடம் பெற்றுச் சென்றனர். இதனிடையே, நண்பர்கள் இது ஏமாற்று வேலை எச்சரித்ததால் சந்தேகம் அடைந்த அவர், நேற்று பெருமாள்செட்டி வீதியில் தான் பணத்துடன் இருப்பதாக கூறி அந்த நபர்களை வரவழைத்து உள்ளார். அப்போது, நண்பர்களுடன் காத்திருந்த ரியாசிடம், 2 கார்களில் வந்த நபர்கள் 5 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டு உள்ளனர்.

முதலில் பணம் மற்றும் அதிர்ஷ்டக்கல்லை காட்டும்படி ரியாஸ் கூறியதால், அதனை குஞ்சிப்பாளையத்தில் உள்ள தங்களது கூட்டாளிகள் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனார். பின்னர், அனைவரும் குஞ்சிப்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு சென்றபோது, அங்கு 2 கார்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் காத்திருந்துள்ளனர். எனினும் உறுதி அளித்தபடி அவர்கள் பணம் மற்றும் அதிர்ஷ்டகல்லை காட்டாததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு உள்ளது.

பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை மாற்றி தருவதாக மோசடி… 22 பேர் கும்பல் கைது…

அப்பேது, ரியாஸ் மற்றும் அவரது நண்பர்களின் சத்தம் கேட்டு, அருகில் விவசாய நிலங்களில் இருந்தவர்கள் ஓடிவந்து காப்பாற்ற முயன்றனர். இதனை கண்டு, மர்மகும்பல் கார்களில் ஏரி தப்பியோட முயன்றனர். அவர்களில் நவீன் ஆனந்த், ரசித், அசித் பட்டேல், சுனில் சுதீஷ், பைசல் ஆகியோரை விரட்டிப்பிடித்த பொதுமக்கள், பொள்ளாச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, கோவை மாவட்ட எஸ்.பி. அருளரசு, தப்பியோடிய நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போலீசார், பொள்ளாச்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பதுங்கியிருந்த 17 பேரை சுற்றிவளைத்து கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து 4 கார்கள் மற்றும் போலி ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.