20 இந்திய வீரர்கள் உயிரிழப்பு விவகாரம்: ராஜ்நாத் சிங்குக்கு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இரங்கல் கடிதம்

 

20 இந்திய வீரர்கள் உயிரிழப்பு விவகாரம்: ராஜ்நாத் சிங்குக்கு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இரங்கல் கடிதம்

பாரிஸ்: 20 இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சருக்கு, பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இரங்கல் கடிதம் எழுதியுள்ளார்.

இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15-ஆம் தேதி இந்திய மற்றும் சீன படைவீரர்களுக்கு இடையே திடீர் தாக்குதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்திய மற்றும் சீன ராணுவத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் 40-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்ததாகவும், சீனாவில் 35 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் இந்தியா – சீனா இடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது.

20 இந்திய வீரர்கள் உயிரிழப்பு விவகாரம்: ராஜ்நாத் சிங்குக்கு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் இரங்கல் கடிதம்

இந்த நிலையில், 20 இந்திய வீரர்கள் உயிரிழப்புக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ப்ளோரன்ஸ் பார்லி இரங்கல் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் “இந்த சம்பவம் இந்திய இராணுவ வீரர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் தேசத்திற்கு பெருத்த அடியாகும். இந்த கடினமான சூழ்நிலையில், பிரெஞ்சு ஆயுதப்படைகள் சார்பாக எனது உறுதியான மற்றும் நட்புரீதியான ஆதரவையும் தெரிவிக்க விரும்புகிறேன். ஒட்டுமொத்த இந்திய ஆயுதப்படைக்கும், துக்கத்தில் உள்ள குடும்பங்களுக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.