பொன்மலையில் நான்காம் நாள் போராட்டம்! பெண்கள்- குழந்தைகள் பங்கேற்பு

 

பொன்மலையில் நான்காம் நாள் போராட்டம்! பெண்கள்- குழந்தைகள் பங்கேற்பு

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் இந்திய அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அனைத்திலும் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டும், 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும், கொரோனா காலத்தில் தென்னகத் தொடர்வண்டித்துறையில் பணி நியமனம் செய்த 3,218 பேரில் வெளி மாநிலத்தவர்களில் 10 விழுக்காட்டிற்கு மேல் உள்ள அனைவரின் தேர்வையும் இரத்துச் செய்ய வேண்டும், அப்பணி

பொன்மலையில் நான்காம் நாள் போராட்டம்! பெண்கள்- குழந்தைகள் பங்கேற்பு

இடங்களைத் தேர்வெழுதிய தமிழர்களுக்கு வழங்க வேண்டும், மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் மண்ணின் மக்களுக்கான வேலைச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும், அமைப்பு சாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம் அமைத்து உடலுழைப்புப் பணிகள் உட்பட அனைத்துப் பணிகளிலும் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் திருச்சி பொன்மலை தொடர்வண்டித்துறை தொழிற்சாலை முன்பு கடந்த 11.09.2020 அன்று தொடங்கி 18.09.2020 வரை ஒரு வாரம் தொடர் மறியல் நடத்தப்படுகின்றது.

பொன்மலையில் நான்காம் நாள் போராட்டம்! பெண்கள்- குழந்தைகள் பங்கேற்பு

அதன்படி, இன்று (15.09.2020) செவ்வாய்க்கிழமை காலை, திருச்சி பொன்மலை தொடர்வண்டித் துறைத் தொழிற்சாலை முன்பு – மூன்றாம் நாள் மறியல் போராட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், தஞ்சை மாவட்டச் செயலாளருமான நா. வைகறை தலைமையில் நடைபெற்றது. த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. விடுதலைச்சுடர் முன்னிலை வகித்தார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர் பழ. இராசேந்திரன் போராட்டப் பேரணியைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயற்குழு தோழர் இரா.சு. முனியாண்டி, குடந்தை நகரச் செயலாளர் தோழர் தமிழ்த்தேசியன் பிரபு, மகளிர் ஆயம் துணைப் பொதுச்செயலாளர் தோழர் செம்மலர், பொதுக்குழு உறுப்பினர் தோழர் இனியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினர்.

பொன்மலையில் நான்காம் நாள் போராட்டம்! பெண்கள்- குழந்தைகள் பங்கேற்பு

போராட்டத்தில், த.தே.பே. பொருளாளர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு க. அருணபாரதி, திருச்சி மாநகரச் செயலாளர் வே.க. இலக்குவன், த.தே.பே. தஞ்சை மாநகரச் செயலாளர் இலெ. இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் க. தீந்தமிழன் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பெண்களும் குழந்தைகளுடன் பங்கேற்றனர்.