நவராத்திரி நான்காம் நாள்: பேரிருளைப் போக்கி பேரின்பத்தை தருவாள் கூஷ்மாண்டா!

 

நவராத்திரி நான்காம் நாள்: பேரிருளைப் போக்கி பேரின்பத்தை தருவாள் கூஷ்மாண்டா!

நவராத்திரி என்பது சக்திக்கும், சக்தி வழிபாட்டுக்கும் உரிய காலம். சக்தியை ஆராதித்து பூஜிப்பதற்கு உகந்த காலம். இந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கனிந்த முகமும், கருணை விழிகளும் கொண்டு, ஆயிரம் மடங்கு அன்புடனும், சக்தியுடனும் தேவி அருள்புரிகிறாள் என்பது ஐதீகம்.
நவராத்திரியின் நான்காவது நாளான சதுர்த்தி தினத்தன்று ‘கூஷ்மாண்டா’ வடிவ துர்க்கையை வணங்குவது வழக்கம். கூஷ்மாண்டா என்றால், ‘தன்

நவராத்திரி நான்காம் நாள்: பேரிருளைப் போக்கி பேரின்பத்தை தருவாள் கூஷ்மாண்டா!

புன்சிரிப்பிலிருந்து உலகை உண்டுபண்ணுபவள்’ என்று தேவி பாகவதம் போற்றுகிறது. ‘கூஷ்மம்’ என்றால் முட்டை, ‘அண்டம்’ என்றால் உலகம். உலகத்தை உருவாக்கிய கூஷ்மம் என்னும் முட்டை தோன்றியது இந்த தேவியிடமிருந்தே.

கூஷ்மாண்டா என்றால் பூசணிக்காய் என்ற ஒரு பொருளும் உண்டு. பூசணிக்காயை பலியாகக் கொடுத்தால் இத்தேவிக்கு மிகவும் பிரியம் என்று ருத்ரயாமள தந்திரம். குஞ்சிகா ஆகமம் போன்ற நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த திருஷ்டிப் பூஷணிக்காய் எப்படி தீவினைகளையும், கண் திருஷ்டியையும் போக்குகிறதோ, அந்தத் தீவினைகளும், திருஷ்டியும் யாரையும் பாதிக்காமல் செய்கிறதோ அவ்வாறே அம்பிகை தன் பக்தர்களைத் தீவினைகள், தீயசக்திகள் அண்டவிடாமல் பாதுகாக்கிறாள். சுக்கிரதசை என்னும் அதிர்ஷ்டம் அடிக்க இந்தத் தேவியின் தயவு வேண்டும். இத்தேவியை மனமாற வணங்கினால் அசுர குருவான சுக்கிரன் வளங்களை அள்ளி அள்ளித் தருவார்.

நவராத்திரி நான்காம் நாள்: பேரிருளைப் போக்கி பேரின்பத்தை தருவாள் கூஷ்மாண்டா!

நவராத்தியின் நான்காவது நாளான இன்று, முனை முறியாத முழு அரிசியைக் கொண்டு படிக்கட்டுக் கோலம் போட்டு, அம்பிகைக்கு அரகஜா பொட்டு வைத்து, பன்னீர் தெளித்து, மல்லிகைப் பூ மாலையால் அலங்கரித்து, கதிர் பச்சை மலர்களால் அதாவது மருக்கொழுந்து, தவனம் போன்ற மலர்களால் அர்ச்சனை செய்து, நைவேத்தியமாக கதம்ப சாதம் படைத்து வழிபட்டால், சகல நோய்களும் கடன்களும் நீங்கும்.
மந்திரம்: ஓம் கூஷ்மாண்டாயை நம
சூர்ய மண்டலத்தை இயக்குபவளான இவளது எட்டாவது கரத்தில் உள்ள கலசம் அஷ்ட சித்திகளையும், நவ நிதிகளையும் தன் பக்தர்களுக்குத் தர வல்லது. நம் உடலில் உள்ள சக்ரங்களில் இவள் ‘அனாஹத’ சக்ரத்தில் இருப்பவள்.

நவராத்திரி நான்காம் நாள்: பேரிருளைப் போக்கி பேரின்பத்தை தருவாள் கூஷ்மாண்டா!

யோக சாதனை செய்வோர் இவள் அருள் கொண்டு இந்த சக்ரத்தை அடைவர். இதை அடைந்தோர் உடல் , மன வலிமை பெறுவர். துக்க நிவாரணம், நோய் நிவாரணம் போன்றவையும் கிட்டுகிறது. இத்தேவியை வணங்கும் பக்தர்கள் தங்கள் வாழ்வில் என்றும் பிரகாசிப்பார்கள். அவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு எனும் சதுர்வித புருஷார்த்தங்களும் சித்திக்கும். இத்தேவியின் அருள் பாவத்தை அழித்து, இன்பத்தை தர வல்லது.

கூஷ்மாண்டா தியான மந்திரம்:
“சூரா சம்பூர்ண கலசம் ருத்ரபலு தவமேவச்சா
ததான ஹஸ்த பத்மப்யாம் கூஷ்மாண்டா சுபதாஸ்து மே’’

தன் தாமரை போன்ற கரங்களில் இரு கலசம் ஏந்தியவளும்,
தன் சிரிப்பால் உலகை சிருஷ்டித்து, அதை பரிபாலனம் செய்பவளாகிய தேவி கூஷ்மாண்டா என் மீது கருணை மழை பொழிவாளாக என்று அர்த்தம். நவராத்திரியில் அம்பிகையை கொண்டாடுவோம். அவளின் பரிபூரண அருளைப் பெறுவோம்.