• April
    05
    Sunday

Main Area

Main



கார் மோதி பலியான விமானப் பெண் குடும்பத்துக்கு ரூ.2.37 கோடி நஷ்டஈடு

insurance
insurance

சென்னை: கார் மோதி உயிரிழந்த விமான நிறுவன ஊழியரான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.2.37 கோடி நஷ்ட ஈடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனிநபர் இன்சூரன்ஸ் மற்றும் வாகன இன்சூரன்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிறைய பேருக்கு இருப்பதில்லை. அதனை எடுத்துக் காட்டும் விதமாக தீர்ப்பாயம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பு அமைந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த மேனகா குழுவாடி(37) என்ற தனியார் விமான நிறுவன பெண் ஊழியர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24-ஆம் தேதி பெங்களூர் - பெல்லாரி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த கார் மோதி படுகாயம் அடைந்தார். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் மேனகா குழுவாடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் மாதம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் சம்பளம் பெற்று வந்தார். மேனகாவின் உயிரிழப்பால் அவரது குடும்பம் பெரும் இழப்பை சந்தித்தது. இதனால் மேனகாவை மோதிய கார் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.5 கோடியே 85 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தீர்ப்பாயத்தை அணுகினார்கள்.

ttn

இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை விவரம், குடும்பத்தினரின் கோரிக்கை ஆகியவை குறித்து தீர்ப்பாயம் பரிசீலனை செய்தது. இந்த நிலையில், விபத்துக்கு காரணமான காரை இன்சூரன்ஸ் செய்திருந்த நிறுவனம் மேனகாவின் குடும்பத்திற்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதன்படி மேனகாவின் பெற்றோருக்கு தலா ரூ1.15 கோடியும், அவரது இளைய சகோதரிக்கு ரூ.7 லட்சமும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தீப்பாயம் கூறியுள்ளது. அந்த வகையில் தற்போது மேனகா குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.2.37 கோடி நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.