மதுராவில் தொடரும் பிரச்சினை.. மசூதிக்குள் ஹனுமான் துதியை பாராயணம் செய்ததாக 4 பேர் கைது

மதுராவில் தொடரும் பிரச்சினை.. மசூதிக்குள் ஹனுமான் துதியை பாராயணம் செய்ததாக 4 பேர் கைது

மதுராவில் கோயிலுக்குள் தொழுகை நடத்திய பிரச்சினை அடங்குவதற்குள், மசூதியில் ஹனுமான் துதியை பாராயணம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் நந்த் பாபா கோயில் உள்ளது. கடந்த வியாழக்கிழமையன்று இந்த கோயிலுக்குள் நுழைந்த பைசல் கான், சந்த் முகமது, அலோக் ரத்தன் மற்றும் நீலேஷ் குப்தா ஆகிய நால்வரும் திடீரென தொழுகை நடத்தினர். அவர்கள் கோயிலுக்குள் நுழைந்து தொழுகை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனையடுத்து கோயிலுக்குள் தொழுகை நடத்திய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்போது அவர்கள் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மதுராவில் தொடரும் பிரச்சினை.. மசூதிக்குள் ஹனுமான் துதியை பாராயணம் செய்ததாக 4 பேர் கைது
மதுரா கோயிலில் தொழுகை நடத்தியவர்கள்

இந்த சூழ்நிலையில் மதுராவில் கோவர்தனில் மசூதிக்குள் சென்று ஹனுமான் துதியை பாராயணம் செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மதுரா எஸ்.பி. கவுரவ் குரோவர் கூறுகையில், மதுரா மாவட்ட காவல்துறை மற்றும் நிர்வாகம் நேரடியாக அல்லது மறைமுகமாக எல்லாவற்றையும் கண்காணித்து வருகிறது. எந்தவொரு நபரும் குழப்பத்தை ஏற்படுத்த அல்லது எந்த மத இடத்தின் கண்ணியத்தையும் உடைக்க முயன்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மதுராவில் தொடரும் பிரச்சினை.. மசூதிக்குள் ஹனுமான் துதியை பாராயணம் செய்ததாக 4 பேர் கைது
மதுரா எஸ்.பி. கவுரவ் குரோவர்

மதுரா மாவட்ட கலெக்டர் ராம் மிஸ்ரா கூறுகையில், யாரும் சட்டத்தை விட உயர்ந்தவர் கிடையாது. எந்தவொரு நபரும் அமைதியான சூழலை தொந்தரவு செய்ய முயற்சித்தால், அவர் அல்லது அவள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.