கூலி தொழிலாளி கொலை வழக்கு… மனைவி உள்பட 4 பேர் கைது…

 

கூலி தொழிலாளி கொலை  வழக்கு… மனைவி உள்பட 4 பேர் கைது…

தேனி

ஆண்டிப்பட்டி அருகே கூலி தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த பாலக்கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி வெள்ளைத்துரை(37). இவருக்கு வள்ளி(33) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த 24ஆம் தேதி அன்று, வெள்ளைத்துரை அந்த பகுதியில் உள்ள ஓடையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சந்தேகத்தின் பேரில், வெள்ளைத்துரையின் மனைவி வள்ளி மற்றும் அவரது உறவினர்கள் ராயவேலூரை சேர்ந்த சண்முகவேல் (33), தெய்வேந்திரன் (39) மற்றும் வேலுச்சாமி என்பவரது மனைவி தங்கம்மாள் (50) ஆகியாரிடம் விசாரித்தனர். அப்போது, வள்ளி அடிக்கடி செல்போனில் பேசியதாகவும், இதுதொடர்பாக தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கூலி தொழிலாளி கொலை  வழக்கு… மனைவி உள்பட 4 பேர் கைது…

இந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி நூற்பாலையில் பணிபுரியும் வள்ளி இரவு வேலைக்கு புறப்பட்ட போது, வேலைக்கு செல்ல வேண்டாம் என வெள்ளைத்துரை கூறியுள்ளார். இதனால் தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டதால், வள்ளி ராயவேலூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வெள்ளைத்துரை அங்கு சென்றும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வள்ளி மற்றும் அவரது உறவினர்களான சண்முகவேல் (33), தெய்வேந்திரன் (39) மற்றும் தங்கம்மாள் (50) ஆகியோர் அன்றிரவு வெள்ளைத்துரையை அடித்துக் கொன்றது தெரியவந்தது. கொலை தொடர்பாக வள்ளி உள்ளிட்ட 4 பேரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.