மத்திய அமைச்சருடன் நெருக்கம்… சீட் வாங்கி தருவதாக உறுதி – பாஜக புள்ளியிடம் ரூ.50 லட்சம் ஆட்டையை போட்ட பாஜக-அதிமுக கேங்!

மத்திய அமைச்சருடன் நெருக்கம்… சீட் வாங்கி தருவதாக உறுதி – பாஜக புள்ளியிடம் ரூ.50 லட்சம் ஆட்டையை போட்ட பாஜக-அதிமுக கேங்!

சமீபத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. பல்வேறு அணிகள் போட்டியிட்டாலும் திமுக கூட்டணி vs அதிமுக கூட்டணிக்கே களத்தில் நேரடி போட்டி இருந்தது. அதிமுக கூட்டணியில் தேசியக் கட்சியான பாஜக இடம்பெற்றிருந்தது. பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் 20 இடங்களை பாஜக பெற்றது. இந்த 20 இடங்களுக்கு கட்சிக்குள் கடும் போட்டி நிலவியது. இப்போட்டியைச் சாதகமாகப் பயன்படுத்தி திருவண்ணாமலையைச் சேர்ந்த பாஜக தலைவரை நால்வர் ஏமாற்றி பண மோசடி செய்துள்ளதாக புதிய புகார் எழுந்துள்ளது.

மத்திய அமைச்சருடன் நெருக்கம்… சீட் வாங்கி தருவதாக உறுதி – பாஜக புள்ளியிடம் ரூ.50 லட்சம் ஆட்டையை போட்ட பாஜக-அதிமுக கேங்!

ஆரணி நகர் பாஜக தலைவராக இருப்பவர் புவனேஸ் குமார். இவர் காவல் துறையில் அளித்த புகாரில், நரோத்தமன், அவரது தந்தை சிட்டி பாபு, விஜயராமன், அவரது மகன் சிவா பாலாஜி ஆகிய நான்கு பேரின் பெயர்களைக் குறிப்பிட்டிருந்தார். அதிமுக நிர்வாகியான விஜயராமன் நரோத்தமன் என்பவரை குமாருக்கு அறிமுகப்படுத்தி, அவர் மத்திய அமைச்சரான கிஷண் ரெட்டியின் உதவியாளராக பணியாற்றியதாகவும், அமைச்சருடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார். இதனை புவனேஸ் குமாரிடம் கூறி அவரது சகோதரிக்கு சட்டப்பேரவை தேர்தலில் சீட் வாங்கி கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்.

மத்திய அமைச்சருடன் நெருக்கம்… சீட் வாங்கி தருவதாக உறுதி – பாஜக புள்ளியிடம் ரூ.50 லட்சம் ஆட்டையை போட்ட பாஜக-அதிமுக கேங்!

அவ்வாறு சீட் வேண்டுமென்றால் நால்வருக்கும் ரூ.1 கோடி கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் புவனேஸ் குமார் ரூ.50 லட்சம் கொடுக்க முன்வந்துள்ளார். அதாவது சீட் அறிவிப்பதற்கு முன் 50% அறிவித்த பின் 50% என்பது தான் டீல். பேசியபடி நால்வருக்கும் ரூ.50 லட்சத்தைக் கொடுத்துவிட்டார். இதைக் கொடுத்த பின் தனக்கு எப்படியும் சீட் கிடைத்துவிடும் என்று எதிர்பார்ப்பில் இருந்த புவனேஸ் குமாருக்கு ஷாக் கொடுத்தது பாஜக தலைமை வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியல். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த புவனேஸ் அவர்களிடம் தனது பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டிருக்கிறார்.

மத்திய அமைச்சருடன் நெருக்கம்… சீட் வாங்கி தருவதாக உறுதி – பாஜக புள்ளியிடம் ரூ.50 லட்சம் ஆட்டையை போட்ட பாஜக-அதிமுக கேங்!

ஆனால் அவர்களோ பணம் கொடுக்காமல் ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்திருக்கின்றனர். இதற்குப் பின்பே அவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் அவர்கள் நால்வர் மீதும் பண மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாஜகவின் புதிய மாநில தலைவராக அண்ணாமலை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் இவ்விவகாரம் பாஜக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.