தீவிரவாதிகளால் தொண்டர் தாக்கப்பட்ட சில மணி நேரத்தில் கட்சியிலிருந்து விலகிய காஷ்மீர் பா.ஜ.க. தலைவர்கள்

தீவிரவாதிகளால் தொண்டர் தாக்கப்பட்ட சில மணி நேரத்தில் கட்சியிலிருந்து விலகிய காஷ்மீர் பா.ஜ.க. தலைவர்கள்

ஜம்மு அண்டு காஷ்மீர் யூனியன் பிரதேசம் பட்கம் மாவட்டம் மொஹிண்ட்போரா கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஹமீது நஜார். அவர் பா.ஜ.க. கட்சியில் உறுப்பினராக உள்ளார். நேற்று காலையில் தீவிரவாதிகள் அப்துல் ஹமீது நஜார் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பியோடி விட்டனர். தீவிரவாதிகள் தாக்குதலில் படுகாயம் அடைந்த அப்துல் ஹமீது நஜாரை போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தீவிரவாதிகளால் தொண்டர் தாக்கப்பட்ட சில மணி நேரத்தில் கட்சியிலிருந்து விலகிய காஷ்மீர் பா.ஜ.க. தலைவர்கள்

மருத்துவமனையில் அப்துல் ஹமீது நஜாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீவிரவாதிகள் பா.ஜ.க. தொண்டரை தாக்கிய சம்பவம் நடந்த அடுத்த சில மணி நேரத்தில் பட்கம் மாவட்ட பா.ஜ.க.வின் பொதுசெயலாளர் உள்பட அந்த கட்சியின் 4 தலைவர்கள் பா.ஜ.க.விலிருந்து விலகினர். இது தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் பா.ஜ.க. தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறியதாவது: காஷ்மீர் பள்ளத்தாக்கில் பா.ஜ.க. தொண்டர்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்கள் பாகிஸ்தானின் விரக்தியை வெளிப்படுத்துகிறது. இது போன்ற தாக்குதல்களால் தங்களது கட்சி பாதிக்கப்படாது. இது போன்ற கோழைத்தனமான செயல்களால் பள்ளத்தாக்கில் பா.ஜ.க. பிரபலமடைவதை பாகிஸ்தானால் தடுக்க முடியாது.

தீவிரவாதிகளால் தொண்டர் தாக்கப்பட்ட சில மணி நேரத்தில் கட்சியிலிருந்து விலகிய காஷ்மீர் பா.ஜ.க. தலைவர்கள்

தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடங்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். காஷ்மீரை தீவிரவாதத்திலிருந்து விடுவிப்போம். இன்று தேசிய மற்றும் பா.ஜ.க. கொடி பள்ளத்தாக்கின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் அடைந்துள்ளது. இது பாகிஸ்தானுக்கு விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் பாகிஸ்தான் பா.ஜ.க. தொண்டர்களை அதன் தீவிரவாதிகள் மூலம் தாக்க தொடங்கியுள்ளது. மேலும் நாங்கள் எங்கள் நடவடிக்கைகளை தீவிரபடுத்துவோம், ஒவ்வொரு வீட்டிலும் தேசிய மற்றும் பா.ஜ.க. கொடியை ஏற்றுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.