நான் பயப்படமாட்டேன்.. எனது முடிவை மறைக்க மாட்டேன்.. உத்தரகாண்டில் பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்

நான் பயப்படமாட்டேன்.. எனது முடிவை மறைக்க மாட்டேன்.. உத்தரகாண்டில் பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்

நான் பயப்படமாட்டேன், எனது முடிவை மறைக்க மாட்டேன் என்று உத்தரகாண்டில் பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கிஷோர் உபாத்யாயா தெரிவித்து இருந்தார்.

உத்தரகாண்ட் காங்கிரஸின் முன்னாள் தலைவர் கிஷோர் உபாத்யாயா கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பா.ஜ.க.வில் இணைந்தார். முன்னதாக கிஷோர் உபாத்யாயா காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவார் என்று செய்தி வெளியானபோது, அவர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் நான் பயப்பட மாட்டேன், நான் ஏதாவது முடிவு எடுக்க வேண்டுமானால் அதை டெல்லியில் வெளிப்படையாக எடுப்பேன். யாரிடமும் மறைக்க மாட்டேன் என்று தெரிவித்து இருந்தார்.

நான் பயப்படமாட்டேன்.. எனது முடிவை மறைக்க மாட்டேன்.. உத்தரகாண்டில் பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்
காங்கிரஸ்

கிஷோர் உபாத்யாயா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: உள்கட்சி பூசல்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. நான் வருத்தப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. மக்கள் வேலை செய்யும்போது, அவர்களின் வேலை அங்கீகரிக்கப்படாதபோது வருத்தப்படுகிறார்கள். கடந்த 1978 முதல் நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன். நான் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருடன் பணியாற்றினேன்.

நான் பயப்படமாட்டேன்.. எனது முடிவை மறைக்க மாட்டேன்.. உத்தரகாண்டில் பா.ஜ.க.வில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர்
சோனியா, ராகுல் காந்தி

நான் அர்ப்பணிப்புடன் வேலை செய்தேன். எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் வெளியேறினர். ஆனால் அமைப்பு உடையவில்லை. அந்த அமைப்பு உத்தரகாண்ட் அரசாங்கத்தை காப்பாற்றியது. கட்சி (காங்கிரஸ்) தனது கடந்த கால அனுபவத்திலிருந்து கற்றுக் கொள்ளவில்லை. கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பா.ஜ.க.வில் சேருவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் சொந்த கட்சி தொடங்கலாம் பா.ஜ.க.வுக்கு ஏன் செல்ல வேண்டும்? என்று கிஷோர் உபாத்யாயா தெரிவித்து இருந்தார். ஆனால் அவர் யாரும் எதிர்பாராத வண்ணம் பா.ஜ.க.வில் இணைந்தார்.