இலங்கையில் 20 சட்டத் திருத்ததிற்கு எதிராக களம் இறங்குகிறாரா முன்னாள் ஜனாதிபதி?

 

இலங்கையில் 20 சட்டத் திருத்ததிற்கு எதிராக களம் இறங்குகிறாரா முன்னாள் ஜனாதிபதி?

இந்த ஆண்டில் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இலங்கையில் நடந்த தேர்தலில், ராஜப்க்‌ஷே தலைமையிலான கூட்டணி வென்றது. மூன்றில் இரண்டு மடங்கு இடங்களை வென்ற அக்கூட்டணியால் ராஜபக்‌ஷே மீண்டும் பிரதமரானார்.

இலங்கையின் 19- வது சட்டத்திருத்ததை நீக்கி, 20-வது சட்டத் திருத்தம் செய்ய பாராளுமன்றத்தில் ராஜபக்‌ஷே கட்சி முயற்சி மேற்கொண்டது. பெரும்பான்மை இருப்பதால் எளிதாக இது சாத்தியம்தான் என்று பேசப்படுகிறது.

இலங்கையில் 20 சட்டத் திருத்ததிற்கு எதிராக களம் இறங்குகிறாரா முன்னாள் ஜனாதிபதி?

20-வது சட்டத்த்திருத்தம் அதிபருக்கு வானளவிய அதிகாரத்தை அளிக்கிறது என்று கூறப்படுகிறது. நாடாளுமன்றம் அமைக்கப்பட்ட ஓர் ஆண்டுக்குப் பிறகு அதை அதிபர் விரும்பினால் எப்போது வேண்டுமானாலும் கலைக்கலாம் என்றும், அமைச்சர் பதவியை நீக்கும் அதிகாரமும் அதிபருக்கு உண்டு போன்ற பல அதிகாரங்கள் அதிபருக்கு அளிக்கிறது இந்தச் சட்டத்திருத்தம்.

இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக 30-க்கும் மேற்பட்டோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாகப் பதவி வகித்த சந்திரிகா குமரதுங்க இந்தச் சட்டத்தை எதிர்த்து களம் இறங்கப்போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் 20 சட்டத் திருத்ததிற்கு எதிராக களம் இறங்குகிறாரா முன்னாள் ஜனாதிபதி?

இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவரும் 1994 முதல் 2005 வரை இலங்கையின் ஜனாதிபதியாகவும் இருந்தவர் சந்திரிகா குமாரதுங்க. அவர் இந்த 20 சட்டத் திருத்ததிற்கு எதிராக பல கட்சிகளை இணைத்து குரல் எழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. அவ்வாறு சந்திரிகா குமாரதுங்க செய்வார் எனில், அது பெரும் விவாதமாக மாறக்கூடும் என்று கருதுகிறார்கள்.