பாக். முன்னாள் தூதர் மகள் சுட்டுக்கொல்லப்பட்டது ஏன்?

 

பாக். முன்னாள் தூதர் மகள்   சுட்டுக்கொல்லப்பட்டது ஏன்?

பாகிஸ்தான் முன்னாள் தூதர் சவுக்கத் அலி முகதாமின் மகள் நூர் முகாதம்(வயது27). இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாக். முன்னாள் தூதர் மகள்   சுட்டுக்கொல்லப்பட்டது ஏன்?

தென்கொரியாவில் பாகிஸ்தானின் தூதராக இருந்துள்ளார் சவுகத் அலி முகதாம். கஜகஸ்தான் பாகிஸ்தான் தூதராகவும் பணிபுரிந்துள்ளார் சவுகத் அலி முகதாம்.

நூர் முகாதம் கொலை சம்பந்தமாக ஜாகிர் ஜாபர் என்ற நபரும் நூர் முகாதமும் நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம்சாட்டப்பட்டு இருக்கும் ஜாபர் இஸ்லாமாபாத்தில் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் மகன்.

ஜாபர் உடனான உறவை நூர் முகாதம் துண்டித்துக் கொண்டதால்தான் ஜாபர் சுட்டுக் கொலை செய்துள்ளார் என்று தகவல்.

கொலையாளி ஜாகீர் ஜாபர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் அவருக்கு உளவியல் பிரச்சனை இருக்கிறது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.