• February
    28
    Friday

Main Area

Main



அரசு பங்களாக்களில் ஜாலியாக ஆட்டம் போடும் முன்னாள் எம்.பி.க்கள்.... தண்ணீர் மற்றும் மின்சார சப்ளையை துண்டிக்க முடிவு...

அரசு பங்களா
அரசு பங்களா

விதிமுறையின்படி, மக்களவை கலைக்கப்பட்ட உடன் முன்னாள் எம்.பி.க்கள் தங்களது உத்தியோகப்பூர்வ குடியிருப்பை ஒரு மாதத்துக்குள் காலி செய்ய வேண்டும். 16வது மக்களவை கடந்த மே 26ம் தேதி கலைக்கப்பட்டது. அதன்படி ஜூன் 25ம் தேதிக்குள் முன்னாள் தங்களது உத்தியோகப்பூர்வ வீட்டில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், பல முன்னாள் எம்.பி.க்கள் அரசு பங்களாவை காலி செய்யாமல் விதிமுறையை மீறி தொடர்ந்து அதில் வசித்து வருகின்றனர்.

சந்திரகாந்த் பட்டீல்

இந்நிலையில், 17வது மக்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்து முடிந்து புதிய உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். சுமார் 300 எம்.பி.க்களுக்கு உத்தியோகப்பூர்வ குடியிருப்பை அதிகாரிகள் ஒதுக்கீடு செய்தனர். ஆனால் அவர்களில் பெரும்பகுதியினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்பு செல்ல முடியாமல் உள்ளனர். ஏனென்றால் அந்த வீடுகளில் முன்னாள் எம்.பி.க்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர். அரசு பங்களாக்களை ஒரு வாரத்துக்குள் காலி செய்ய அவர்களுக்கு அரசு உத்தரவிட்டது. 

மக்களவை

இருப்பினும் அவர்கள் காலி செய்வதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.. 
இந்நிலையில், இதுதொடர்பாக மக்களவையின் வீட்டுவசதி குழு அதிரடி முடிவை எடுத்துள்ளது. விதிமுறையை மீறி அரசு குடியிருப்பில் வசித்து வரும் முன்னாள் எம்.பி.க்களின் குடியிருப்புக்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சார சப்ளையை 3 நாட்களில் துண்டிக்க மக்களவை வீட்டு குழு முடிவு செய்துள்ளது. வீட்டு குழு தலைவர் சந்திரகாந்த் பட்டீல் இது குறித்து கூறுகையில், விதிமுறையை மீறி தங்கியிருக்கும் முன்னாள் எம்.பி.க்களின் குடியிருப்புகளுக்கு தண்ணீர் மற்றும் மின்சார சப்ளை துண்டிக்கப்படும். அதனால் அவர்கள் குடியிருப்பை காலி செய்வார்கள் என உறுதியாக நம்புகிறோம். 1 அல்லது 2 மாதங்களில் அந்த பங்களாக்கள் ஒதுக்கப்பட்ட எம்.பி.க்களுக்கு கிடைக்கும் என கூறினார்.

2018 TopTamilNews. All rights reserved.