பதவி கொடுக்கல! பாஜகவிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ!!

 

பதவி கொடுக்கல! பாஜகவிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ!!

வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார்.

வேதாரண்யம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எஸ்.கே. வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி காணொலி மூலம் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார். வேதாரண்யம் தொகுதியில் 1996 முதல் 2011 வரை தொடர்ந்து 3 முறை சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் வேதரத்தினம். கடந்த 2011 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டதால் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வேதரத்தினம் 2015 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து மாநில செயலாளர் ஆனார். தற்போதைய பாஜக தலைவர் முருகன் அறிவித்த மாநில நிர்வாகிகள் பட்டியலில் நாகை தெற்கு மாவட்ட பாஜக மேலிட பார்வையாளராக அறிவிக்கப்பட்டதால் அவரது ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

பதவி கொடுக்கல! பாஜகவிலிருந்து திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ!!

இதனால் முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் தலைமையில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஒருவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நான்கு பேர், ஊராட்சி மன்றத் தலைவர் ஒருவர் உள்பட கட்சி நிர்வாகிகள் பாஜகவிலிருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.